புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

தங்கர் பச்சான் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுங்காலமாகவே ஏதாவதொரு பெயரில் இயக்கம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என என்மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண் டவர்களும் கேட்டுக்கொண்டே இருந் தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை; அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என இதுவரை மறுத்து வந்தேன். தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூறையாடியவர்களின் எண்ணிக் கையை விடவும் சூறையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்குரிமையை சரியாக பயன்…

Read More

உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறியதற்காக கர்நாடக முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்திற்கு ஜூலை 11ஆம் தேதிவரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஆனால், கடந்த 2016 டிசம்பர் 15, 2017 ஜனவரி 4 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் இதைப்போல தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த மூன்று தடவையும் உத்தரவை நிறைவேற்ற…

Read More

கட்சியையும் ஆட்சியையும் தன்வசம் வைத்திருக்கும் சசிகலா தரப்புக்கே இரட்டை இலை சின்னம்: இரட்டை இலையை அடையாளம் காட்டிய திண்டுக்கல் மாயத்தேவர் கருத்து

கட்சியையும் ஆட்சியையும் தன்வசம் வைத்திருக்கும் சசிகலா தரப்புக்கே இரட்டை இலை சின்னம்: இரட்டை இலையை அடையாளம் காட்டிய திண்டுக்கல் மாயத்தேவர் கருத்து

இரட்டை சிலை சின்னம் சசிகலா அணிக்கா, ஓ.பி.எஸ்., அணிக்கா என்பது குறித்து இன்று டெல்லியில் இரு தரப்பையும் அழைத்து இறுதி விசாரணை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்த நிலையில், இரட்டை இலை அதிமுக-வின் வெற்றிச் சின்னமாக வந்த விதம் குறித்து பேசினார் 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக-வின் முதல் வேட்பாளரும் வழக்கறிஞருமான மாயத்தேவர். ‘‘1973- திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் களத்தில் புதிய கட்சி என் பதால் வேட்பாளரான என்னிடம் ஏணி, விளக்கு உள்ளிட்ட பதினாறு சின்னங்களை காட்டி ‘இதில் ஒன்றை உங்களது சின்ன மாக தேர்வு செய்யுங்கள்’ என்றார்கள். நன்கு யோசித்துவிட்டு, நான்தான் இரட்டை இலையைத்…

Read More

சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் 27-ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் 27-ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நிலுவை வழக்குகள் குறித்த விவரங்களை தாமதமாக தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வரும் 27-ம் தேதி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஆஜராகாவிட்டால் பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஜாமீன் மனு மீதான விசார ணையின்போது, நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2011 வரை நிலுவையில் உள்ள வழக்கு களின் தற்போதைய நிலை, இதில் எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜுக்கு…

Read More

நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்: அங்க அடையாளம் லேசர் சிகிச்சையில் அழிப்பு?

நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்: அங்க அடையாளம் லேசர் சிகிச்சையில் அழிப்பு?

உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கலான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூர் தம்பதி தொடுத்த வழக்கு தொடர்பாக உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மருத்துவ அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அங்க அடையாளம் ஒன்று லேசர் சிகிச்சையில் அழிக்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்புச் செலவு வழங்க நடிகர் தனுஷுக்கு உத்தரவிடக்கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்…

Read More

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

திருத்தணியை அடுத்த ராமாபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6½ லட்சம் செலவில் பகுதிநேர ரே‌ஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சூர்யநகரம் ஊராட்சியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இதையடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுபற்றி நடவடிக்கை எடுக் கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கஜலட்சுமி புரம் சூர்யநகரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ….

Read More

“சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்”: கங்கை அமரன் சிறப்புப் பேட்டி

“சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்”: கங்கை அமரன் சிறப்புப் பேட்டி

அதிமுக, திமுகவைத் தாண்டி தமிழக மக்கள் மாற்று அரசியலுக்கு தயாராகிவிட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் கங்கை அமரன் அளித்திருக்கும் சிறப்புப் பேட்டி. தமிழக பாஜகவில் பல முகங்கள் இருந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களை வேட்பாளராக முன்னிறுத்தக் காரணம் என்ன? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாரை களமிறக்குவது என்ற ஆலோசனை நடைபெற்றபோது அனைவரும் ஒருமனதாக எனது பெயரை முன்மொழிந்தனர். கட்சியில் இணைத்த நாள்முதலே ஒரு தொண்டனாக கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான அங்கீகாரமே அது. ஏற்கெனவே கலைத்துறையில் பிரபலமானவர், மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பதைத்…

Read More

தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது: தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் மேலும் விவரங்கள் கேட்டு நேரில் அழைத்துள்ளது. நாங்கள் டெல்லி சென்று கழக சட்டவிதிமுறைகள் குறித்து எடுத் துரைப்போம். எம்ஜிஆருக்கு பின்னால் அதிமுகவை மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா நடத்தி வந்தார். சிறந்த நிர்வாகத்தை அளித்தார். ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார். சட்டியில் இருந்தால்தான்…

Read More

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அணி மாறப் போவதாக மிரட்டல்: அதிகாரிகள் மதிப்பதில்லை என குற்றச்சாட்டு

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அணி மாறப் போவதாக மிரட்டல்: அதிகாரிகள் மதிப்பதில்லை என குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் கடந்த வெள்ளிக்கிழமை தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலன், சக்திவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், சம்பந்தப்பட்ட கல்குவாரியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதிமுகவில் சலசலப்பு சசிகலா அணியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி…

Read More

ஓரிரு நாளில் புதிய கட்சி-தீபாவை முதல்வராக்குவதே நோக்கம்: கணவர் மாதவன் திடீர் பல்டி

ஓரிரு நாளில் புதிய கட்சி-தீபாவை முதல்வராக்குவதே நோக்கம்: கணவர் மாதவன் திடீர் பல்டி

புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த தீபாவின் கணவர் மாதவன் தீபாவை முதலமைச்சராக்குவதே அந்த கட்சியின் நோக்கம் என நேற்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 17-ம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தீபா தனித்து செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், தொண்டர்கள் விருப்பப்படி தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த அவர், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை சிஐடி காலனியில் தனது ஆதரவாளர்களுடன் மாதவன் தனியாக ஆலோசனை நடத்தினார்….

Read More
1 160 161 162 163 164 181