நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கபட்டது.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. அதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில்  108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டார். * இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் *  ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும் * நடமாடும் எம்.எல்.ஏ அலுவகம் செயல்படுத்தப்படும்* ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த நடவடிக்கை * எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். * ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க நடவடிக்கை*ஆர்.கே.நகரில் உள்ள அரசு கல்லூரி உலக தரத்துக்கு மாற்றப்படும் * அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி…

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். விவசாயிகள் தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் வாயில் பாம்புக்கறியை வைத்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக மெரினாவில் மாணவர்கள் ஒன்று கூடி போராட போவதாக தகவல் வெளியானதை அடுத்து அதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். …

Read More

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 15-வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மகாத்மா காந்தி படத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவினரை புதுச்சேரி மாநில முதல் மந்திரி வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை மந்திரி சுனில் குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங்கை சந்தித்தனர்….

Read More

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- எங்கள் அணியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்தியாவிலேயே இதுவரை எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்கள் முதல் எதிரியே தி.மு.க.தான். எங்கள் பிரசாரம் அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். ஆர்.கே.நகரில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார். அப்போது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிப்பார். சசிகலாவும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் அணியின் குறிக்கோள்.ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணியின் கை ஓங்கி வருகிறது. அதனால்தான்…

Read More

ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

ஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு  செய்து வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.இதில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. ‘அம்மா டி.வி.’ என்ற பெயரில் 24 மணி நேர செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டி.வி. தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான இடம் நுங்கம்பாக்கத்தில்  தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த அணியின் மூத்த தலைவர் ஒருவர்…

Read More

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் இளைஞர்கள் கைது

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: மெரினாவில் இளைஞர்கள் கைது

சென்னை மெரினாவில் இளைஞர்கள் கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவினர். தடையை மீறி போராடிய இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். மெரினா கடற்கரையில் மதியம் 1.30 மணியளவில் இளைஞர்கள் சிலர் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளுடன் கடலில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை கடற்கரைக்கு அழைத்துவரும் முடற்சியில் ஈடுபட்டனர். சில இளைஞர்களை போலீஸார் கைது செய்த நிலையில் 5 மாணவர்கள் மட்டும் கடலில் இறங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸாரும் கடலில் இறங்கிச் சென்று அந்த மாணவர்களை அழைத்து வந்தனர். மாணவர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர். எங்கள் உயிர் பெரிதல்ல: “டெல்லியில் போராட்டம் நடத்தும்…

Read More

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகள் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மாறி, மாறி புகார்

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகள் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மாறி, மாறி புகார்

இரட்டை மின் விளக்கையும், தொப்பி சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமி‌ஷன் தற்காலிகமாக முடக்கியது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘இரட்டை மின் விளக்கு’ என்ற சின்னத்தையும், சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘தொப்பி’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் இ.மதுசூதனன் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் ‘தொப்பி’ சின்னத்திலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்தந்த சின்னத்துக்கு ஆதரவாக அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள் திரட்டி வருகின்றனர்….

Read More

நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான்.

நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே திடீரென மாயமாகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டதால் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.  இந்த மனு மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அவர்கள் சொல்லும் தகவல்கள் பொய்யானவை. எனவே அந்த வழக்கை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கு விசாரணையின்போது தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய, அவரது பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த…

Read More

சிறையில் சசிகலாவை சந்தித்த முதல்வர், 4 அமைச்சர்களை தகுதியிழப்பு கோரி வழக்கு

சிறையில் சசிகலாவை சந்தித்த முதல்வர், 4 அமைச்சர்களை தகுதியிழப்பு கோரி வழக்கு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிப் புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி யின் மகன் டி.ஆணழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறை வால் மருத்துவனையில் சேர்க்கப் பட்டு கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரா னார். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதும், அவரை முதல் வராக்கும் நோக்கத்துடன் பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாகக்…

Read More

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் – ஓ. பன்னீர்செல்வம்

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் – ஓ. பன்னீர்செல்வம்

தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார் மதுசூதனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ஓ.பன்னீர் செல்வம் அனியின் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் வேட்பாளர் இரட்டை மின்கம்பம் சின்னத்தை  இரட்டை இலையாக்கிவிட்டனர் என தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்டனர் அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர் செல்வம்.தோல்வி பயத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தில் தினகரன் புகார் அளித்துள்ளார். எங்கள் வெற்றி வேட்பாளர் மதுசூதனன் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்என கூறினார்.

Read More
1 158 159 160 161 162 181