அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித்தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ந்தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்கிழமை)…

Read More

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஈபிஎஸ்சை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என…

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு.!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு.!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார். இவருடன் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 20-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்-அமைச்சருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

சாங் சாங்-லிங்: அதானிக்கும் அவருக்கு என்ன தொடர்ப

சாங் சாங்-லிங்: அதானிக்கும் அவருக்கு என்ன தொடர்ப

ஹிண்டன்பர்க் அறிக்கையில் மொத்தம் மூன்று முறை, சாங் சுங்-லிங் பற்றி சொல்லப்பட்டுள்ளது. சாங் சுங்-லிங்கை முதன்முறையாகக் குறிப்பிட்டு, மொரீஷியஸில் க்ரோமோர் என்ற ரகசிய நிறுவனம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது, இந்த நிறுவனத்தை அதானி பவர், 42.3 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. இந்த நிறுவனத்தை சாங் சுங்-லிங் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் உள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் உள்ளூர் முகவரியை சுங்-லிங் தனது முகவரியாக கொடுத்துள்ளார். சுங்-லிங்குக்கும் அதானி குழுமத்துக்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், அவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு நெருக்கமானவர் என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் இந்த சீன நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது இடம்…

Read More

கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு

கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. உறுதி அளித்ததன் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தி இருந்த வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன்…

Read More

‘அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….’ – பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…!

‘அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….’ – பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…!

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். இந்தசூழ்நிலையில், அண்ணாமலை நேற்று தனது பேட்டியில், பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை…

Read More

அடுத்தடுத்து பதவி விலகல்…! பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா…!

அடுத்தடுத்து பதவி விலகல்…! பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா…!

பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயணித்தேன்! உண்மையாக, நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அண்ணாமலையை கடுமையாக தாக்கி இருந்தார். சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் விலகல் அறிவிப்பிற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “அன்பு சகோதரர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்” என்று…

Read More

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது…

Read More

ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி…

Read More

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர். பின்னர் யுபிஐ-பேநவ் இணைப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- இணைய வழி பண பறிமாற்றமான யுபிஐ-பேநவ் இணைப்பு நமது புலம்பெயர்ந்தோர், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும். இன்றைய காலகட்டத்தில்,…

Read More
1 29 30 31 32 33 181