மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் – நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் – நிர்மலா சீதாராமன்

பிஎச்டிசிசிஐ என்ற தொழில் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: 2023 – 24 பட்ஜெட்டில் பொது மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தொடர்ச்சியாக 3 – 4 ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு…

Read More

ஈரோடு தேர்தலை இந்தியாவே கவனித்து கொண்டிருக்கிறது..! அதிமுக அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு தேர்தலை இந்தியாவே கவனித்து கொண்டிருக்கிறது..! அதிமுக அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை திமுகவின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள் என்று கூறினார். எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா ? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ. 2 கோடிக்கு வைக்கலாமே…

Read More

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் – திடுக்கிடும் சம்பவம்…!

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் – திடுக்கிடும் சம்பவம்…!

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொண்டுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின்படி வீடு கட்ட 2 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். கட்டப்படும் வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் 2 லட்ச ரூபாய் மொத்தம் 4 தவணையாக தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, மானியமாக குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வீடு கட்ட 2 லட்ச ரூபாய் தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 4 தவணையாக மத்திய அரசு செலுத்தும். இந்நிலையில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கணவர்களை…

Read More

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? – எதுவும் நடக்கலாம் – கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? – எதுவும் நடக்கலாம் – கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்தது. இந்த போட்டா போட்டி அறிவிப்பால் ‘இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவானது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய 2 பேரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமாதான தூதுவர்கள் போன்று செயல்பட்டனர். அவர்கள், அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும். ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்று தங்களது விருப்பத்தை 2 பேரிடம் தெரிவித்தனர். இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ‘இரட்டை இலை’ சின்னம் கேட்டு…

Read More

விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வக்கீல் விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வக்கீல் அன்னா மேத்யூ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் ராஜீவ் ராமச்சந்திரன், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று காலை ஆஜராகி முறையிட்டார். அந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. இதனிடையே சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் பிற்பகலில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் நாளை…

Read More

ஒரு குழந்தைக்கு 100 மரங்கள் சிக்கிம் அரசு முடிவு

ஒரு குழந்தைக்கு 100 மரங்கள் சிக்கிம் அரசு முடிவு

சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். குழந்தைப் பிறப்பை நினைவுகூரும்விதமாக இவ்வாறு மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்று சிக்கிம் அதிகாரிகள் கூறுகின்றனர். திட்டத்தை தொடங்கிவைத்த முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் கூறுகையில், ‘ஒரு குழந்தை வளர வளர, அதற்காக நடப்பட்ட மரங்களும் வளர்வதைக் கவனிப்பது, பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்கும், அதை கொண்டாடும் நல்லதொரு அடையாளம் ஆகும். இது போன்ற ஒரு பசுமை…

Read More

பிள்ளையார் ஒரு வந்தேறி – தமிழ் தெரியாது : திராவிட கூலிகள் !!

பிள்ளையார் ஒரு வந்தேறி – தமிழ் தெரியாது : திராவிட கூலிகள் !!

பிள்ளையார் ஒரு வந்தேறி – தமிழ் தெரியாது : திராவிட கூலிகள் !! பொல்லா பிள்ளையார் – நம்பியாண்டார் நம்பி – ராஜ ராஜ சோழன் !! வெங்கடேச தீக்ஷதர் ( சிதம்பரம் ) & இரா. கிஷோர் குமார் ( விராட் ஹிந்துஸ்தான் சங்கம் ) – நேர் கானல் !! உண்மையை உரைக்கும் ஸ்தல புராணமும் – சந்தானத்தை அழிக்கத்துடிக்கும் சுயநல கூட்டமும் !! கிளிக் செய்து.. விதியோயோவை கண்டு… கருத்து பதிவு செய்து அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய…

Read More

குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர், கவர்னர் இணைந்து தொடங்கி வைத்தனர்…!

குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர், கவர்னர் இணைந்து தொடங்கி வைத்தனர்…!

புதுச்சேரி அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோர்ட்டிற்கு கீழ், உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். இந்த திட்டத்துக்கான துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. புதிய திட்டத்தை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தில் 70ஆயிரம் பெண்கள் உதவித்தொகை பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மன உறுதியை அதிகரிப்பது எப்படி? – மிக எளிமையான வழிகள்

மன உறுதியை அதிகரிப்பது எப்படி? – மிக எளிமையான வழிகள்

மன உறுதி குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதை மேலும் அதிகரிக்க சில சக்திவாய்ந்த உத்திகள் உள்ளன. முக்கியமான வேலையைச் செய்யும் போது உங்கள் கவனத்தை சிதறடித்தல் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் இருக்கும் போது அதை மீறத் தூண்டுதல் போன்று நம் சுயக்கட்டுப்பாட்டை சோதிக்கவே வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றும் சில கோரமான நாட்களை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். இது போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் மன உறுதியை நீங்கள் நம்பியிருப்பீர்கள். குறுகிய கால தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்கும், தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள் அல்லது தூண்டுதல்களில் சிக்காமல் இருப்பதற்கான திறனை மன உறுதி என உளவியலாளர்கள் வரையறுக்கின்றனர். சிலர் மற்றவர்களை விட அதிக மன…

Read More

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது – சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது – சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்…

Read More
1 30 31 32 33 34 181