யாழ். நாரந்தனை படுகொலைகளோடு ஈபிடிபிக்கு தொடர்பில்லை: டக்ளஸ்
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனையில் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபிடிபி) தொடர்பில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் எமது அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாளர்களாக…
Read More









