இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஷிங்டனுக்கு மண்டியிட்டார்

இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஷிங்டனுக்கு மண்டியிட்டார்

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் வீழ்ச்சியினால் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள போர் மேகங்கள் குவிகின்ற நிலையில்,கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூடியது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுடன் சேர்த்து,இலங்கையும் பூகோள-அரசியல் பகைமைகளின் நீர்ச்சுழிக்குள்ளும் மற்றும் பெரும் வல்லரசுகளால்,குறிப்பாக அமெரிக்காவினால் மேலும் மேலும் உச்சரிக்கப்படும் இராணுவவாதத்தை நோக்கிய திருப்பத்துக்குள்ளும் இழுபட்டு சென்றுகொண்டிருக்கின்றது. செப்டம்பர் 21 அன்று ஐ.நா.வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை உட்பட,நியூ ஜோர்க்கில் அவரது முழு நடத்தையும்,அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவரது மண்டியிடலை வெட்கமின்றி வெளிப்படுத்துகின்றது. ஐ.நா. பொது செயலாளர் பான் கி-மூன்,அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் அவர் பெற்ற மதிப்புரைகள்,கடந்த வருடம் ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததில்…

Read More

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

– கலாநிதி நல்லையா குமரகுருபரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி ஒக்டோபர் 21ம் திகதியுடன் ஒன்றரை தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. கடந்த 15 ஆண்டகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தம் அரசியல் தலைமையாக தமிழ் மக்களால் பல்வேறு தேர்தல்கள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. காலத்திற்குகாலம் ஒரு தசாப்தம் கூடியது ஒன்றரை தசாப்த காலங்கள் ஊடாக தமிழ் தலைமை புது வடிவம் எடுத்து வரவேண்டிய தேவை ஏற்படுவதும் புதிய தலைமைத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பான வரலாற்று நிகழ்வாகும். இந்த வரிசையிலே கடந்த 15 ஆண்டுகள் தமிழினத்தின் வரலாற்றில் ஒரு…

Read More

விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்ட மைத்திரி!

விவசாயிகளுக்கு விஞ்ஞானிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்ட மைத்திரி!

அதிக அறுவடையை பெறுவதற்காக இரசாயனப் பொருட்கள் பல விவசாயிகளினால் பசளைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவ்வாறான பசளைகள் காரணமாக சிறுநீரக கோளாறுகளே அதிகம் ஏற்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தாமரை தடாகத்தில் நேற்று இடம் பெற்ற விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டு அதற்கு விஞ்ஞானிகள் தீர்வு வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி நாம் இயற்கை மற்றும் அறிவியல் விடயங்களை சமுதாயத்தில் ஊக்குவிக்க வேண்டும். அதிக அறுவடையை பெறுவதற்காக இரசாயனப் பொருட்கள் பல விவசாயிகளினால் பசளைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Read More

ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி

சூரியவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியை தனது தாயாருடன் பாடசாலைக்கு வருமாறு ஆசிரியை தெரிவித்துள்ளார். எனினும் மாணவியின் தாயார் தவிர்க்க முடியாத காரணத்தினால் பாடசாலைக்கு செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவி தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் உண்மைக்கு புறம்பானவை என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். advertisement

Read More

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்படப்போகும் முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள்

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்படப்போகும் முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள்

கொலை செய்யப்பட்ட சன்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேண்டும் என்றே குழப்பி, சந்தேக நபர்களை விடுவித்தமை தொடர்பாக இரண்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான ஜயந்த விக்ரமரத்ன மற்றும் மகிந்த பாலசூரிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படும் முன்னர், அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற அரச வாகனத்தின் இலக்கத்தை லசந்த வலது கையில் எழுதிய அவரது தனிப்பட்ட குறிப்பேட்டை தொலைத்ததாக ஜயந்த விக்ரமரத்னவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More

ராஜித கூறுவது பொய்! வாகனம் சட்ட ரீதியானது என்கிறார் நாமல்

ராஜித கூறுவது பொய்! வாகனம் சட்ட ரீதியானது என்கிறார் நாமல்

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட தனது வாகனம் சட்ட ரீதியானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த வாகனமானது, 50 ஆயிரம் டொலரைக் கொடுத்தே கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசினால் வழங்கப்படும் வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Read More

மரண தண்டனை கைதி துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் கோத்தபாய!

மரண தண்டனை கைதி துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் கோத்தபாய!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Read More

மலேசிய தாக்குதல் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன?

மலேசிய தாக்குதல் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் மற்றும் அவருக்கு இரண்டாவது நபரான மஜிந்த ஜயசிங்க தாக்குதலுக்கு உள்ளானர்கள். இந்த தாக்குதல் சம்பவம் இலங்கையர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின்படி, இலங்கை தரப்பில் ராஜபக்சர்களின் பிரபல சூழ்ச்சிக்காரராக வழக்கறிஞர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் தீவிரவாதிகள் மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அடையாளப்படுத்துவதற்கும் தமிழர்கள் மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்குமே செயற்பட்டுள்ளார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், உதவித்தொகையின் ஊடாக…

Read More

பாரத லக்ஸ்மன் கொலை – மஹிந்தவின் முக்கியஸ்தர் துமிந்தவுக்கு மரண தண்டனை

பாரத லக்ஸ்மன் கொலை – மஹிந்தவின் முக்கியஸ்தர் துமிந்தவுக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் பிரதிவாதிகளான 13 பேரும் துமிந்த சில்வாவும் நீதிமன்றிற்கு வருகைத் தந்துள்ளனர். பாரத லக்ஸ்மனின் மகளான ஹிருணிகா பிரேமசந்திரவும் நீதிமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.

Read More

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த  அனைத்துலக காணாமல் போனோர் தினம்

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் வெஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும்…

Read More
1 43 44 45