இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்ஷவின் அமைச்சரவை !!
இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சி செய்யும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமே கையளித்தது. இதற்கமைய, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தேதிக்கு பின்னரே கிடைக்கும் என்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை உருவாக்க கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் தேதி நியமிக்கப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத…
Read More







