ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் – இலங்கை பெண் பௌத்த துறவிகள்
”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,” என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள், ”பிக்குணிகள்” என்று பெண் துறவிகளுக்கு அடையாள அட்டை…
Read More








