நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

நூறு ஆண்டுகளில் முதல் முறையாக கேமராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை

ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் ‘பிளாக் பேந்தர்’ பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற சிறுத்தையை படம்பிடிக்கப்படும் முதல் சம்பவம் இதுவென கருதப்படுகிறது. அதிக தகவல்கள் இல்லாத இந்த விலங்கு பற்றி அடையாள முக்கியத்துவமான சில புகைப்படங்களே உள்ளன. கருஞ்சிறுத்தை (பேன்ந்தர்) பற்றிய வதந்திகளை கேட்போம். ஆனால், இதனை கறுஞ்சிறுத்தை (லெப்பேர்ட்) அல்லது கறுப்பு ஜாக்குவார் என்ற சொற்களால் கென்யாவில் அழைக்கின்றனர். வழிகாட்டி ஒருவரின் சொற்படி சிறுத்தையின் தடங்களை பின்தொடர்ந்த வில்…

Read More

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் – துருக்கி

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் – துருக்கி

சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இனத்தை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞரின் உயிரிழப்பை தொடர்ந்து சீனாவில் உள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் உய்கர் இனத்தை சேர்ந்த பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ஷின்ஜியாங் பகுதியில் அப்தூர்ஹிம் ஹீயிட் எனப்படும் இசைக்கலைஞர் எட்டு வருட சிறை தண்டனை காலத்தில் இருந்தார். இந்த முகாம்களில் அவர்கள் உய்கர் இன மக்கள் சித்ரவதை செய்யப்படுவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த முகாம்கள் மறுவாழ்வு வழங்கும் கல்வி முகாம்கள் என சீனா தெரிவிக்கிறது. உய்கர் இன மக்கள் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் சீனாவின் வட மேற்கு…

Read More

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்

வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் சென்றிருந்தனர். இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய மேலதிக ஊதியத்தை அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், போர்ட்…

Read More

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர் நிக்கி ஹாலே (வயது 46). இந்திய அமெரிக்கரான இவர், அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் மூத்த அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹாலே தனது பதவி விலகலை இன்று அறிவித்து உள்ளார். ஆனால் அதற்கான காரணம் பற்றி அவர் வெளியிடவில்லை. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் அதிபராக டிரம்ப் பதவியேற்று கொண்ட பின் 4 நாட்கள் கழித்து ஹாலேவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டது. தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராகவும் ஹாலே பதவி வகித்துள்ளார்.

Read More

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப்…

Read More

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்க பார்லி.,யால் வழங்கப்படும் மிக உயரிய ‘தங்கப்பதக்கம்’ விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பார்லி.,யின் சார்பில் சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படும். இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பார்லி., உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். கடந்த 23ம் தேதி(செப்.,23) தாக்கல் செய்த இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்லி., உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். முன்னதாக இவ்விருது அமெரிக்கர் அல்லாத…

Read More

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள், 70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஜூரி அறிக்கை அமெரிக்காவை உலுக்கியுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த எட்டு டையோசிஸ்கள் உள்ளன. அவற்றில், 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில், 6 டையோசிஸ்களின் சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரை, அந்த மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட்டுக்கு உட்பட்ட ஜூரி அமைப்பு இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன், இதுபோல் ஜூரி அமைப்பு விசாரணை நடத்துவது, அந்த மாகாண நடைமுறை. 900 பக்கங்கள் கொண்ட…

Read More

‘இனி இது யூத தேசம்’: மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம்

‘இனி இது யூத தேசம்’: மசோதா – இஸ்ரேல் நிறைவேற்றம்

இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம். இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது. இஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவினை கண்டித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த மசோதாவினை வரவேற்று உள்ளார். இதனை முக்கியமான தருணம் என்று போற்றியுள்ளார். 2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி புகைப்பிடிக்காதோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஏன்? இந்த மசோதாவினை அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் ஆதரித்து உள்ளது….

Read More

டிரம்ப் – புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது?

டிரம்ப் – புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கிடையேயான உச்சிமாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் இன்று நடக்கிறது. இந்த சந்திப்பு அதிகம் எதிர்பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன? அமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அவர்களுக்கிடையேயான பகைமையை இன்னமும் அதிகரித்தது. அமெரிக்கா – ரஷ்யா என்னதான் பிரச்சனை? இதன் தொடக்கத்தை அறிய வேண்டுமென்றால் 1945-1989ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடந்த பனிப்போருக்கு செல்ல வேண்டும். இவ்விரு நாடுகளும் நேரடியாக சண்டையிட்டதில்லை. சோவித் யூனியன் வீழ்ந்த பிறகு, மற்றும் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா எழுந்த பிறகும் கூட இந்த…

Read More

பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு

பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு

பாகிஸ்தானில் சிக்கியருக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக். கில் வசித்து வரும் சீக்கியர் குலாம் சிங் சமூக வலைதங்களில் பதிவியேற்றியதாவது: பாகிஸ்தானில் லாகூரில் தியரா சாஹால் பகுதியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன்.அங்குள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் மனைவி ,குழந்தைகளுடன் குடியிருந்து வந்தேன்.. . அந்த அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் திடீரென என்னை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்து வெளியேற்றினார். மேலும் தனது அடியாட்களுடன் வந்த எனது தலைப்பாகையை அகற்றினர். எனது மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்து கொண்டார். இவ்வாறு அவர் பதிவியேற்றி யிருந்தார். குலாம்சிங்கின் பதிவேற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது

Read More
1 5 6 7 8