ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின் அமெரிக்காவுடன் ஒரு நீடித்த வணிக ஒப்பந்தத்தை பிரிட்டன் பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் மூன்று நாட்கள் அரச பயணமாக பிரிட்டன் சென்றுள்ளனர். பிரிட்டன் அரசி எலிசபெத்தை நேற்று சந்தித்த டிரம்ப், இன்று தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். டிரம்பின் பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் தெரீசா மேயால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஹூவாவே என்கிற சீன நிறுவனத்தோடு வணிகம் நடத்துவதை முதன்மையாக கொண்டு, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வணிக நிறுவனங்களின் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கூட்டம். டவுனிங்ஸ்டீரீட் அலுவலகத்தில் அதிபர்…

Read More

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார். டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை…

Read More

பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும். 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்? இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர…

Read More

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு எல்லை வழியாக போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படை தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் கோடிக்கணக்கான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதேபோன்று கடல் வழியாகவும் இந்தியாவிற்கு போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் கடத்தப்படுகிறது. இப்போது இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியின்போது 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் குஜராத்திற்கு வருகிறது என எல்லைப் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவலை உளவுத்துறை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் படகிலிருந்து இந்திய படகிற்கு மாற்றி கடத்தலை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது….

Read More

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட…

Read More

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர். ஹெல்மண்ட் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீசார் 17 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் படைகள் எப்போது எல்லாம் உதவியை கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க படைகள் உதவிகளை…

Read More

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் நடுக்கடலில் படகு உடைந்து 70 அகதிகள் பலி

துனிசியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக கடல்வழியாக ஒரு படகில் ஏராளமானோர் சென்றனர். துனிசியாவின் எஸ்பேக்ஸ் மாகாணத்தில் இருந்து 40 மைல் தூரத்தில் நடுக்கடலில் சென்றபோது திடீரென அந்த படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற அகதிகள் அனைவரும் கடலில் விழுந்தனர். அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை மீட்டனர். இருப்பினும் கடலில் மூழ்கி 70 பேர் பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

இதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. இரவு வரை…

Read More

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். ”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான…

Read More

சவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை

சவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை

ரியாத் சவுதி அரேபியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில், அவர்கள் நாட்டின் பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிக்க, ‘ஸ்லீப்பர் செல்’லாக செயல்படும் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி வந்தது தெரிய வந்தது. அதனால், அந்நாட்டு சட்டப்படி அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவானது.இதைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More
1 29 30 31 32 33 48