கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி

கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு…

Read More

இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்

இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்

இலங்கையில், ‘ஈஸ்டர்’ தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ‘இலங்கை வரலாற்றில், பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இப்படியொரு, தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை’ என, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை, முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களின் பண்டிகை தினமான, ஈஸ்டர், உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அண்டை நாடான, இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், சிறப்பு வழிபாடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்கள், கூட்டம் கூட்டமாக, குடும்பத்துடன் வந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.தலைநகர்…

Read More

முல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு

முல்லர் அறிக்கை வெளியானது: அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை எழுதப்பட்டது. வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம் அதிபர் டிரம்ப் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என்று டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார். ரஷ்யத் தலையீட்டில் டிரம்ப்க்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் அவையில் உள்ள எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின்…

Read More

ஈரான் போராட்டத்தில் ஹிஜாப்பை கழற்றிய பெண் வழக்கறிஞருக்கு ஓராண்டு சிறை

ஈரான் போராட்டத்தில் ஹிஜாப்பை கழற்றிய பெண் வழக்கறிஞருக்கு ஓராண்டு சிறை

போராட்டம் ஒன்றில் ஹிஜாப்பை கழட்டியதற்காக ஒராண்டு சிறைத் தண்டனையை பெற இருக்கிறார் ஈரானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர். இது தொடர்பாக ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில்,” ஈரானைச் சேர்ந்தவர் விதா முவாஹெத் என்ற இளம் வழக்கறிஞர் கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு ஹிஜாப் கட்டாய சடத்துக்கு எதிராக தான் தலையில் கட்டியிருந்த ஹிபாப்பை கழட்டினார். இதன் காரணமாக இவர் ஓராண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க இருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. விதா இந்த வழக்கு தொடர்பாக முன்னரே ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர்…

Read More

ஜூலியன் அசாஞ்சே கைது:பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம்-எட்வர்டு ஸ்னோடன்

ஜூலியன் அசாஞ்சே கைது:பத்திரிகை சுதந்திரத்துக்கான இருண்ட தருணம்-எட்வர்டு ஸ்னோடன்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். ஈகுவேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே விரைவில் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார் என்று லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அசாஞ்சேவை லண்டன் போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்கா குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்ட எட்வர்டு…

Read More

ஜாலியன் வாலாபாக் படுகொலை; 100 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

ஜாலியன் வாலாபாக் படுகொலை; 100 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நாடு முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ந்தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் நகரில் இந்தியர்கள் பலர் ஒன்றாக கூடி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு வந்த இங்கிலாந்து நாட்டு ஜெனரலான ரெஜினால்டு டயர் தனது குழுவினரை அவர்களை நோக்கி சுடும்படி உத்தரவிட்டான். அங்கு கூடியிருந்தவர்கள் தப்பி செல்ல இருந்த குறுகலான ஒரே வழியும் அடைக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டத்தினர் வேறு எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1,100க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர். சிலர் தங்களை காத்து கொள்ள அங்கிருந்த…

Read More

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜோ பிடென் (வயது 76). இவர் 1973-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் செனட் சபை எம்.பி. பதவி வகித்தவர். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதி பதவி வகித்தார். அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39) என்ற பெண் சமீபத்தில் ஜோ பிடென் மீது பரபரப்பு செக்ஸ் புகார் எழுப்பினார். இது குறித்து அவர் அங்கு…

Read More

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ்…

Read More

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை அரசு, அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் புதன் கிழமையன்று இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளரின் உரையைத் தொடர்ந்து இலங்கை வெளி விவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.  இதன் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. ஐ.நா.  நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை. அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அதில்…

Read More

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு

இந்துக்கள் எங்களுடைய எதிரிகள்; பாகிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் சர்ச்சை பேச்சு

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கைபர் பக்துன்குவா மாகாண சட்டமன்ற உறுப்பினரான ஷேர் ஆசம் வாசீர் அவையில் பேசும்பொழுது, இந்துக்கள் எங்களுடைய எதிரிகள் என கூறினார்.  இவரது பேச்சுக்கு அங்கு சிறுபான்மை சமூக உறுப்பினர்களாக உள்ள ரவி குமார் மற்றும் ரஞ்ஜித் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எனினும், வார்த்தைகளை தேர்வு செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்ட வாசீர், இந்துக்கள் என்பதற்கு பதிலாக இந்துஸ்தான் (இந்தியா) என கூறியிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன்பின், எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் நம்பிக்கையூட்டி மீண்டும் அவைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி ரவிகுமார் கூறும்பொழுது, பாகிஸ்தானுக்கு பகை நாடாக இந்தியா உள்ளது என்றாலும்,…

Read More
1 30 31 32 33 34 48