காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதிகள்…

Read More

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயற்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் தொலைபேசி…

Read More

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்

வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ள ஆடை தொழிலாளர் போராட்டத்தில் பொலிஸ் தாக்குதல்

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் கடந்த சில நாள்களாக நடத்தி வரும் போராட்டம்,புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. தலைநகர் டாக்காவையொட்டி சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 10,000 பேர் போலீஸாரால் வீச்சானந தண்ணீரைப் பாய்ச்சி அப்புறப்படுத்தப்பட்டனர். டாக்காவின் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 5,000 பேரைக் கலைப்பதற்காக போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

Read More

ட்ரம்ப் – கிம் சந்திப்பு மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என வெள்ளைமாளிகை அறிவித்தது

ட்ரம்ப் – கிம் சந்திப்பு  மீண்டும் அடுத்தமாதம் நடைபெறும் என  வெள்ளைமாளிகை அறிவித்தது

அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வோஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என ட்ரம்பும், கிம்மும் உறுதி எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தினபடி, அணு ஆயுதங்களை…

Read More

அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்

அமெரிக்க தேர்தலில் ரஸ்ய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார்

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுகட்சி வேட்பாளராக போட்டியிட்ட ட்ரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஸ்யா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரஸ்யாவும், ட்ரம்பும் பல முறை மறுத்துள்ளனர். ஆனால், டரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் ரஸ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டது…

Read More

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்ற பெண், 2020ம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார். சென்னையில் இருந்து அமெரிக்கா சென்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா,ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வாருகிறார். இதன் முதற்கட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கமலா தேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் ஸ்யாமலா…

Read More

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தெரசா மே அரசு தப்பியது

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தெரசா மே அரசு தப்பியது

லண்டன் பார்லி.யில் பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரக்சிட் எனப்படும் முடிவுக்கு இங்கிலாந்து பார்லி.யில் 2016-ல் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பிற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய பிரதமர் தெரசா மே கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் பார்லிமென்ட்டில் வரைவு உடன்படிக்கையை தாக்கல் செய்தார். பிரி்ட்டன் பார்லி.யில் பிரக்சிட் வரைவு உடன்படிக்கை மீது ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. பார்லி. கீழ் சபையில் 432 பேர் எதிராகவும், , 202 பேர் ஆதரவகாவும் ஓட்டளித்தனர்.இதனால் பிரக்சிட் முடிவு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து கீழ்சபை…

Read More

ஏமனில் அமெரிக்க வான்தாக்குதலில் அல்-கொய்தா தளபதி பலி: போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்

ஏமனில் அமெரிக்க வான்தாக்குதலில் அல்-கொய்தா தளபதி பலி: போர்க்கப்பலை தகர்த்த சம்பவத்தில் தேடப்பட்டவர்

அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்கிற போர்க்கப்பல் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு சென்றது. அதன்படி அங்கு கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகை ஓட்டிவந்து ‘யுஎஸ்எஸ் கோல்’ கப்பலின் மீது மோதினர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி கப்பலில் இருந்த கடற் படைவீரர்கள் 17 பேர்…

Read More

நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சு

நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சு

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார். கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி)…

Read More

சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்”

சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்”

சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அங்கே மேலும் சிலகாலம் தங்கியிருக்கவேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நினைப்பதாகக் கருதப்பட்டது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணிக்கான அமெரிக்கத் தூதரான பிரெட் மெக்கர்க் சில நாள்களுக்கு…

Read More
1 32 33 34 35 36 48