மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குறித்த மரணதண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன. அதன் படி குறித்த வழக்கில் இன்று துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
1 46 47 48