பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்
கடந்தபலஆண்டுகளாககனடாவில் இளையதலைமுறைநடனக் கலைஞர்களை உருவாக்கிவரும் பிறிமாடான்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதிமாலை 6.00 மணிக்குசமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”என்னும் நாடகத்தை மேடையேற்றுகின்றது. அன்றையதினம் ஸ்காபுறொவில் உள்ள மெற்றோபொலிட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி நாடகத்தை திருவாளர்கள் குயின்றஸ் துரைசிங்கம்,இலியாஸ் மற்றும் செல்வி கீர்த்தி காதயா ஆகியோர் தயாரித்து வழங்குகின்றார்கள். எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் இந்த நிகழ்விற்கான அனுமதிச் சீட்டுக்களை மண்டபவாசலிலும் பெற்றுக்கொள்ளலாம். இங்கே காணப்படும் படத்தில் நேற்று முன்தினம் மாலை பிறிமாடான்ஸ் நிறுவனத்தின் கலைக்கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் வர்த்தக நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர் உட்படநாடகத்தில் பங்கெடுக்கும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களும்…
Read More









