ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி ஸ்காபுறோநகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழக அறிஞர் ஈழத் தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுப்பவர் மற்றும் உலகக் கவிஞர்கள் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா. கனடாவின் ஸ்காபுறோநகரில் 876 Markham Road என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Fabian’s Cafe’ உணவகத்தின் கூட்டமண்டபத்தில் எதிர்வரும் 30-04-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை மேற்படி நூல்களின் அறிமுக விழா நடைபெறும். அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள அறிஞரின் நூல்கள் பின்வருமாறு:- சேதுகாப்பியம் 8ம் காண்டம், யேசுஅந்தாதி, தமிழ்ப் பணியில்…

Read More

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

கனடாவில் “கதிர்” என்ற பெயரால் பலராலும் அறியபபட்ட டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் 26ம் திகதி புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார். தனது 95வது வயதில் உயிர் நீத்துள்ள தாயாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு கனடா உதயன் நிறுவனம் தனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கின்றது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமையன்றுகொழும்பில் நடைபெற்றன. அனுதாபங்களைத் தெரிவிக்கவிரும்புவோர் 416 299 4492 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்

Read More

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே…

மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே…

உலக புத்தகத் தின விழாவில் பேச்சு – வந்தவாசி.ஏப்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில், ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.குமார் பேசினார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி மாணவ- மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். புதிய நூலக உறுப்பினரகளுக்கான அடையாள அட்டையை வந்தவாசி இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார்…

Read More

Mr. Arnold Chan, the MP for Scarborough Agincourt , hosted a Community Dinner at Royal Fine Dining Banquet in Scarborough.

Mr. Arnold Chan, the MP for Scarborough Agincourt , hosted a Community Dinner at Royal Fine Dining Banquet in Scarborough.

Mr. Arnold Chan, the MP for Scarborough Agincourt , hosted a Community Dinner at Royal Fine Dining Banquet in Scarborough. The newly elected MP for Markham Thornhill Mary Ng was the Chief Guest of the event. Many Tamil speaking friends were gathered there to grace the event. Canada Uthayan Editor in Chief Logan Logendralingam also attended met few Political Leaders there,

Read More

Foreign Home Buyers Tax

Foreign Home Buyers Tax

Jim Karygiannis, City Councillor for Ward 39, Scarborough-Agincourt, is expecting that the Provincial Government will impose a foreign home buyers tax in light of news that the province will query citizenship and residency for real estate purchases, starting on Monday. It was revealed today that, starting on April 24th, homebuyers in Ontario will be mandated to provide information about their citizenship and place of residence. The information gathered from this rule change will be one…

Read More

நாளை நடைபெறும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

நாளை நடைபெறும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

பிரித்தானியாவாழ் வழக்கறிஞரும் எழுத்தாளருமான செல்லத்தம்பி ஸ்ரீ ஸ்கந்தராசாஅவர்கள் எழுதிய “இனிக்காதா இலக்கணம்” , “ஆங்கிலம் பிறந்தகதையும் வளர்ந்த கதையும்”, “பேசாதவைபேசியவை”, “ஆங்கிலம் மூலம் தமிழ்”, மற்றும் The Deserted Wife and the Dancing Girl’s Daughter ஆகியஐந்துநூல்களின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்காபுறோ நகர சபைமண்டபத்தில் நடைபெறும். விழாவிற்கு கனடாதமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் தலைமை தாங்குவார்.

Read More

திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்

திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள்

யாழ்ப்பாணம்-வரணி ஆகிய இடங்களைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் தற்போது கனடாவில் பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களுமான திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் கொண்டாட்டம் இன்று ஸ்காபுறோ நகரில கென்னடி வீதியில் உள்ள “கென்னடி கொன்வென்சன் சென்றர்” மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அழைக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள என பலர் குடும்பம் சார்ந்தவர்களோடு வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டமாக திரு இராமநாதன்-திருமதி ராஜேஸ்வரி தம்பதியின் 40வது திருமண நாள் விழா நடைபெற்றது என்றால் மிகையாகாது. தம்பதிகள் இருவருமே ஒத்து குணாம்சங்கள் நிறையவே கொண்டவர்கள். அவர்களது பிள்ளைகள் இருவரும் மிகவும் அன்பாகவும் நெருக்கமாகவும் தங்கள் பெற்றோருடன் பழகி வருகின்றனர். அதற்கு மேலாக…

Read More

முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின் விடையமாக பதிவு செய்திருக்கும் முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது. ஆனாலும், இவ்வளவு காலமும் அமைதியாக இருந்ததன் பின்னனியையும் பதிவு செய்யவும். இப்படி எல்லா தமிழ் ஊடகங்களும் தெளிவாக உண்மைகளை வெளிக் கொண்டு வந்தால் மட்டும் தான் மக்களின் சொத்துக்களை பதுக்கியவர்களிடம் இருந்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கொடுக்க முடியும்.  பல தடவைகள் இந்த விடயத்தை கனடாட உதயன் பதிவு செய்திருக்கின்றது. குறிப்பிப்பாக பத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய தலையங்கள். அவைகளில் பல எமது ஆசிரிய தலையங்களின் தொகுப்பாக வெளிவந்த “இதுவரை” என்னும் நூலில் அடங்கியுள்ளன. உதாரணமாக இந்த நிதி அபகரிப்பு தொடர்பான…

Read More

LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் கிராமம் திறப்பு விழா

LYCA ஞானம் அறக்கட்டளை, இலங்கையின் வடக்கு மாகாணம் வவுனியா மாவட்டத்தின் சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் பகுதியில், LYCA ஞானம் கிராமத்தினை உருவாக்கியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக பூந்தோட்ட அகதி முகாம்களில் பெரும்சிரமங்களின் மத்தியில் வாழ்ந்துவந்த மக்களின் நிரந்தர வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 220 மில்லியன் ரூபா செலவில் 150 வீடுகள், லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் கட்டப்பட்டுள்ளன. சின்ன அடம்பன் – ராசபுரம் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் இம்மாதம் (ஏப்ரல்) 10 ஆம் திகதி LYCA ஞானம் அறக்கட்டளையினால் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. LYCA ஞானம் கிராமம் திறப்பு விழாவில் லைக்கா நிறுவனத்…

Read More

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

கனடாவில் இயங்கிய வண்ணம் பல இளம் இசைக் கலைஞர்களையும் வாத்தியக் கலைஞர்களையும் உருவாக்கி வரும் ” பாரதி ஆர்ட்ஸ் கலைக் கூடம்

நேற்றும் இன்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கள் இசைத் திறன்களை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆகியோர் முன்பாக இசைத்துக் காட்டினர். இன்றைய சிறப்பு விருந்தினர்களில் இருவராக கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கலைக்கூடத்தின் அதிபர் திரு மதிவாசன் அவர்களையும் பாராட்டு உரையாற்றினர். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்

Read More
1 20 21 22 23 24 28