13வது உலக பண்பாட்டு மாநாடு முன்னிடடு முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் நடைபெற்றது

13வது உலக பண்பாட்டு மாநாடு முன்னிடடு முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிடடு இயக்கத்தின் அகிலத்தலைவர் மற்றும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள் வாழும் கனடா தேசத்தில் இதன் அங்குரார்ப்பண வைபவத்தையும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது அந்த வகையில் நேற்று ஞாயிற்று ்கிழமை மாலை ஸ்காபுறோவில் பின்ச் – மார்க்கம் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள பிறிமா நடனக் கல்லூரி கலையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமை…

Read More

18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார்

18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார்

நாளை மறுநாள் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார். ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த துறைகளில் சாதனை செய்தவர்கள் சிலருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இங்கே காணப்படும் படத்தில் நேற்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய கவிஞர் என். சுகுமாறன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய பிரமுகரும் எழுத்தாளருமான அ. முத்துலிங்கம் மற்றும் “காலம்” சஞ்சிகையின் ஆசிரியர் திரு செல்வம் அருளானந்தம் ஆகியோர் வரவேற்பதை காணலாம்.

Read More

பகுதி நேர வேலை வாய்ப்பு

பகுதி நேர வேலை வாய்ப்பு

ஸ்காபுறோவில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்கு பகுதி நேர வேலைக்கு, அலுவலக உதவியாளர் மற்றும் கொம்பியூட்டரில் தமிழ் ஆங்கில மொழிகளில் விளம்பரங்களை வடிவமைக்கும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் கொம்பியூட்டரில் Uploading மற்றும் Downloading பணிகளில் ஆழமான அறிவுள்ளவர்கள் ஆகியோர் உடனடியாகத் தேவை. தோடர்புகளுக்கு 416 732 1608 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

Read More

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன் அவர்களையும் ஏனைய போராளிகள் மற்றும் போரின் காரணமாக கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூரும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மக்கள் ஏற்பாடு செய்த மேற்படி நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த மக்கள் கலந்து கொண்டார்கள். திரு விசாகன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பாலசுந்தரம், டென்மார்க் பிரமுகர் திரு தர்மகுலசிங்கம் மற்றும் சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், அரசியல் பிரமுகர் ஈழவேந்தன், சோம சச்சிதானந்தன் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினார்கள் ஒரு உணர்வுபூர்மான நிகழ்வாக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

Read More

TORONTO VOICE OF HUMANITY நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

TORONTO VOICE OF HUMANITY  நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் அங்கு விதவைத் தாய்மார்களின் நலன்பேணும் பணிகளில் ஈடுபட்டு வரும் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நிதியை யாழ்ப்பாண பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திரு ப. தமிழ்மாறன் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் தலைவர் திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம், அவரது பாரியார் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இங்கே காணப்படும் படத்தில் யாழ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் திருமதி சாலினி சார்ள்ஸ், கலைஞர் கொலின், கலாச்சார உத்தியோகத்தர்…

Read More

முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு நூலகள்: வெளியீட்டு விழா

முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு  நூலகள்: வெளியீட்டு விழா

கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்கள் எழுதிய ‘தமிழர் மரபும்,புலம்யெர் வாழ்வும்”; சீவகசிந்தாமணியும் அதன் இலக்கியச் சுவையும்” என்ற இருநூல்களும் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா பெரிய சிவன்கோவில் மண்டபத்தில் பேராசிரியர் இ.பாலசுந்தரம் தலைமையில் வெகு சிறப்பாக வெளியிடப் பட்டன. குத்து விளக்கேற்றல்,கனடா தேசீய கீதம்,தமிழ்த்தாய் வாழ்த்து,அமைதி வணக்கம் என்பவற்றுடன் ஆரம்பமாகியது. அதன் பின்னர் காவியாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின்.வரவேற்பு நடனம்,எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களது வரவேற்புரை, கவிஞர் கழக முன்னாள் தலைவர் திரு.சி.சண்முகராசா அவர்களின் வாழ்த்துரை என்பன இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து கனடா தேசீய கீதம் பாடிய ஆஞ்சனா சத்தி வடிவேல்,தமிழ்தாய் வாழ்த்துப் பாடிய சங்கவி முகுந்தன்ஆகியோரும்,வரவேற்பு நடனமாடிய காவியாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளும், அப்பள்ளி ஆசிரியை…

Read More

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர். பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் . வானொலி தொலைக்காட்சிகளில் எம்.என்.எம்.அனஸ் என்று அறியப்பட்ட இவரின் கதை வித்தியாசமானது. கொஞ்சநேரம் அவரோடு உரையாடினால் அவரின் உற்சாகம் எங்களை தொற்றிக்கொள்ளும். இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயகதை வெகு விரைவில் உங்கள் உதயன் பத்திரிகையில்……….. பிரதம ஆசிரியர்

Read More
1 18 19 20 21 22 28