கனடாவின் “நட்சத்திரா” இசைக்குழுவினர் நடத்தும் பாராட்டு விழா

கனடாவின் “நட்சத்திரா” இசைக்குழுவினர் நடத்தும் பாராட்டு விழா

கனடாவில் கடந்த நான்கு வருடங்களாக இயங்கிவரும் “நட்சத்திரா” இசைக்குழுவினர் கனடியப் பாடகர் திரு ஜெயராஜ் கணபதிப்பிள்ளையின 25 வருட இசைத்துறை பங்களிப்பை மெச்சியும் கௌரவித்தும் நடத்தும் பாராட்டு விழா எதிர்வரும் யுலை மாதம் 15ம் திகதி மாலை 5.30 மணிக்கு ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பல்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பெரியோர்கள் மற்றும் கல்விமான்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த பாடகர்கள் இசையாசிரியர்கள் இசைக்கருவிகளில் ஆற்றல் மிகுந்த விற்பன்னர்கள் நண்பர் மற்றும் ஊடகவியல◌ாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து பாடகர் திரு ஜெயராஜ் கணபதிப்பிள்ளை அவர்களின் சேவையினைப் பாராட்டும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

Read More

யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் இயக்கத்தின் தலைமையகத்தைக் கொண்ட கனடாவிலும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தைக் கொண்ட ஜேர்மனி நாட்டிலும் தமிழ் நாட்டிலும், மாநாடு நடைபெறவுள்ள யாழ்ப்பாணத்தில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளையாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மாநாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்துவருவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜேர்மனி வாழ் அன்பர் சர்வதேச கிளைகளின் தொடர்பாளர் திரு இராஜசூரியர் இராமநாதனாலும் மேற்கொள்ளப்ப்டுகினறது .இந்த வேளையில் மேற்படி மாநாட்டை யாழ்பபாணத்தில் நடத்துவதற்குரிய முழுச் செலவில் பெரும்பகுதியை எமக்குத் தந்துதவிய கனடாவாழ் அன்பர் வர்த்தகப் பெருந்தகை கொடையாளி,…

Read More

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada, took place yesterday at Vichandra Fine Dining and Banquet Center in Scarborough. Mr. Kathir Thuraisingam, presided over the event and it was very colourful. Our Members of Parliament Mr. Gary Anandasangary, Mr. Shuan Chen and Councillor Mr. Nethan Shan, all attended and graced this event. The too, presented Greeting Certificates to Editor in Chief Mr. Logan Logendralingam. Many members…

Read More

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாட்டிய கலாசேஸ்த்திர நடனக் கல்லூரியின் அதிபர்; ஸ்ரீமதி தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு.திருமதி ஜெயகாந்தன் தம்பதியின் புதல்வியுமான செல்வி அஞ்சலி ஜெயகாந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை மறுநாள் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். அரங்கேற்றம் சிறப்புற நடைபெற கனடா உதயன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றான்..

Read More

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக  1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு மூலம் வைத்தியசாலைக்கு ஐம்பதாயிரம் டாலர்கள் திரட்டப்பட்டன. கடந்தநாளை சனிக்கிழமை 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் 46 பரத நடன ஆசிரியர்களின் வழிகாட்டலில் 1000 நடனக் கலைஞர்கள் பங்குபற்றும் “பரத மைல்” முழு நீள நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது. கனடாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டும் ஸ்காபுறோ வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொள்வனவு செய்யும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பல சமூகத் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட ஐம்பதாயிரம் டாலருக்குரிய மாதிரிக் காசோலையை நடன ஆசிரியைகள் ஸ்காபுறோ…

Read More

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அழகிய முறையிலும் சமய சாஸ்த்திர முறைக் கேற்பவும், மிகுந்த பொருட்செலவிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டஙகள், அமைக்கப்பட்டு வரும் ஆலயத்தில் அமையவிருககும்; சிறப்பம்சங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை எதிர்நோக்கும் நிதி மற்றும் தொழில்நுட்பம் மறறும் சட்ட ரீதியான சவால்கள் ஆகியவற்றை தமிழ் பேசும் ஊடகங்களில் பிரதிநிதிகளுக்கு விளக்கும் கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை புதிய ஆலயம் கட்டப்படும் ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் உள்ள ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. ஆலய…

Read More

Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami

Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami

The Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami, taken place on last Saturday at the Swamiji Temple, located at Ellesmere and Belamy Road, Scarborough. Many devotees and well wishers were attended the holy event. As a part of the event, a demonstration on Swamiji’s “Third Eye” was also taken place. Two very young devotees presented that. Canada Uthayan’s Editor in Chief Mr. Logendralingam…

Read More

“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

கனடாவில் சிறப்பாக இயங்கிவரும் “கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி எம் அனைவரதும் மனங்கவரும் டை நிகழ்வாக அமைந்தது. “கலைக்கோவில் நுண்கலைக் கூடத்தின் நிறுவனர்களும் ஆசிரியர்களுமான திரு க. குகேந்திரன், மற்றும் திரு வனிதா குகேந்திரன் ஆகியோரின் புதல்வரும் மாணவரும் ஏழே ஏழு வயது நிரம்பிய மழலைக் கலைஞருமாகிய செல்வன் ஆரன்; குகேந்திரன் அவர்களது “பால லயம்-1” என்னும் இசை டிவிடி வெளியீட்டு விழாவும் அவரது மிருதங்க ஆற்றலை காட்டும் கச்சேரியும் சிறப்பாக நடைபெற்றது. யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு கௌரிசங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் ….

Read More

ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர இசையையும் இனிமையையும்

செந்தில் குமரனின் “மின்னல்-2017” உச்ச இசை நிகழ்சசியில் சிக்கு புக்கு சிக்கு ரயிலே, மற்றும் ஊர்வசி.. ஊர்வசி, கொலம்பஸ், கொலம்பஸ் ஆகிய பாடல்களையும் பாடி மேலும் தனது ட்றம்ஸ் இசைக் கருவியில் தனது வித்தைகளைக் காட்டுவதற்குமாக பிரபல பின்னணிப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சுரேஸ் பீற்றர் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வநதிறங்கினார். அவரை வரவேற்கும் வகையில் “மின்னல்”செந்தில்குமரனின் அழைப்பின் பேரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் தனது உதவியாளர் சகிதம் அங்கு சென்றிருந்தார். அவரை வரவேற்க மேலும் நண்பர்களும் அங்கு கூடியிருந்தார்கள். எதிர்வரும் 30-06-2017 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக்கலாச்சார மண்டபத்தில் மின்னல் -2017 இன் அதி உயர் தர…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

1974ம் ஆண்டு, இன்றிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம் எதிர்வரும் யுலை 8ம் திகதி கனடாவின் ஸ்காபுறொ நகரில் நகரசபை மண்டபத்தில் (150 Borough Drive)அனுஸ்டிக்கப்படவுள்ளது. ஆவணஞானி என்ற பட்டத்திற்குரியவரான இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் நேரடியாக பாராட்டுத் தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் கனடாவில் அமரர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் அவர்களை நினைவு கூருவது மிகப் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும்

Read More
1 17 18 19 20 21 28