நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்
ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது….
Read More









