சிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள, திரிசூலம் மலையில், சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பட்டா நிலங்கள், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள கிராமம் திரிசூலம். மலை மீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவிலால், இந்த ஊருக்கு, திரிசூலம் என, பெயர் கிடைத்தது.இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடக்க, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களை சுற்றிலும் வைத்து பூஜித்ததாகவும், லிங்கத்தை…
Read More









