கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
இளைஞர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ள செல்பி மோகம் அவர்களுடைய உயிருக்கே பல நேரங்களில் உலை வைக்கிறது. இது தெரிந்தும் செல்பியால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் ஒருவர் கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்று கையில் காயத்தை வாங்கியுள்ளார். அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ படம் எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பையும் தாண்டி கூண்டு அருகே சென்றார். பின்னர் அவர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் ‘செல்பி’ படம்…
Read More








