சமூகம்
பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் – நெட்வொர்க் இல்லாத இடத்திலும் செயல்படும்
சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும். தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது: பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டி சேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட்…
Read Moreபுதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம் பெற்றதற்கு தி.மு.க. கண்டனம்
புதுடெல்லி: மத்திய அரசு புதிதாக அச்சிட்டு வரும் 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் அதன் மதிப்பு தேவநாகரி எண்ணிலும் அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு டெல்லி மேல்-சபையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள், மற்ற நோட்டுகளில் இருப்பது போன்ற சர்வதேச எண்களையே புதிய நோட்டுகளிலும் அச்சிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த பிரச்சினையை மேல்-சபையில் நேற்று எழுப்பி பேசிய திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், ‘புதிதாக அச்சிடப்பட்டு உள்ள 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண் அச்சிடப்பட்டு உள்ளது. அரசியல் சாசன விதிப்படி ரூபாய் நோட்டுகளில் சர்வதேச எண்கள் மட்டுமே அச்சிடப்பட வேண்டும். எனவே தேவநாகரி எண் அச்சிடப்பட்டு இருக்கும் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது’…
Read Moreதமிழர்களின் வீரவிளையாட்டு – முனைவர் இளசை சுந்தரம்
அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு – விழா கமிட்டி அறிவிப்பு
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரை: வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்….
Read MoreManimekalaiPrasuram’s 40 Books released on 15.1.17 At Book Fair
Main Guests are – Director, Actor – Bhakiyaraj, Poornima Bakyaraj, Actor Pandu, Kutti padmini, Lena Tamilvanan, Olimpic cards Noor mohamed, Justice Vimala.. singar sinmayi …Etc.
Read Moreஜல்லிக்கட்டு: மவுனம் கலைத்த ரஜினி
ஜல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தைபகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர்அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும் என, ரசிகர்கள்பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ரஜினியின் புதிய படங்கள்திரைக்கு வரும் முன், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி, அவர் பேசும், பஞ்ச் வசனங்கள், ஊடகங்கள் வழியே கசிந்து, பரபரப்பு ஏற்படுத்தும். இதனால், அவரது புதிய படத்திற்கும், மவுசு ஏற்படும். ஆனால், படம் வெளி வந்த பின், அந்த அலை அடங்கும். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு காரணமாக, தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை…
Read More”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி
கனடா வாழ் பரதநாட்டிய இரசிகை இரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞருமான ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களின் தனிநடன நிகழ்ச்சி (சோலோ) இன்று சென்னை மாநகரில் உள்ள கலா மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. மேற்படி நடன நிகழ்ச்சியில் கனடாவில் வாழ்ந்து வரும் நடன ஆசிரியை (சக்தி நர்த்தனாலயா அதிபர்) திருமதி ஜனனி ரவிசங்கர் அவர்களும் இன்னொரு நடன ஆசிரியையோடு இணைந்து ஒன்றாக நட்டுவாங்கம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது. கனடாவில் பல ஆண்டுகள் ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களிடமும் ஆசிரியை அற்புதராணி அவர்களிடமும் நட்டுவாங்கம் கற்றுக்கொண்ட திருமதி ஜனனிக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய ”கலைமாமணி” சாகிர் உசேன் அவர்களுக்கு கனடா உதயன் நன்றியை தெரிவிக்கின்றது….
Read Moreதலாக் முறை குரான் போதனைகளுக்கு எதிராக உள்ளது: உயர் நீதிமன்றம்
மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் சட்டம் குரான் போதனைகளுக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி சுனீத் குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை அல்லது உடனடி விவாகரத்து முறை மிகவும் கொடூரமானது, இத்தகைய நடைமுறை இந்தியாவை ஒரு தேசமாக பின்னடைவு காணச் செய்துள்ளது என்றார். “இந்தியாவில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் சட்டம் இறைத்தூதர் அல்லது குரான் புனித போதனைகளின் உணர்வுகளுக்கு எதிரான திசையில் செல்கிறது. இதே போன்ற தவறான கருத்தாக்கம்தான் மனைவியின் விவாகரத்து செய்யும் உரிமையையும் சீர்குலைத்து வருகிறது. மேலும், இஸ்லாத்தில்…
Read Moreஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை
சென்னை, கவிஞர் வைரமுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக இன்று சென்றார். இதையடுத்து அவர் பற்றிய வதந்தி பரவியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் நான் முழு மருத்துவ பரிசோத னைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதுபோன்று இப்பொழுதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழுமை யாக நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவ குறிப்பு- தெரிவிக்கிறது. எனவே பரபரப்பான செய்தி வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என்மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக் கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது…
Read More









