சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி
சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள். சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது. அப்போது,பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள்,ஒரு ஜீப்,பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல்…
Read More