நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா? குஷ்பு காட்டம்
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இருவரும் வசை மாரி பொழிந்து கொண்டு இருக்கின்றனர். தமிழக காங்., தலைவர் விரைவில் மாறப்போகிறார் என சில நாட்களுக்கு முன் குஷ்பு கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, ‘நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது முட்டை மற்றும் செருப்பு வீசி, விரட்டி அடித்தனர். அங்கும் சும்மா இருக்காமல், வீண் வம்பு செய்ததாலேயே இதெல்லாம் நடந்தது. காங்கிரசிலும் அதே நிலையை மேற்கொண்டிருக்கிறார். இங்கும் அவருக்கு அதே நிலை விரைவில் ஏற்படும். அவர் சினிமா நடிகை என்பதால், அரசியலில் நடிக்கத் தேவையில்லை’ என, திருநாவுக்கரசர் சாடி இருந்தார். இதையடுத்து,…
Read More







