மதுரை அஜித் ரசிகர்களுக்கு துளிர்விட்ட அரசியல் ஆசை

மதுரை அஜித் ரசிகர்களுக்கு துளிர்விட்ட அரசியல் ஆசை

தமிழகத்தில் மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம். அதனால், மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளிலும், பொது இடங்களிலும் அஜித்தின் விவேகம் படத்தை வரவேற்கும் வகையில் அவரது ரசிகர்கள் அந்த படத்தின் போஸ்டர்கள், கட்அவுட்கள், தோரணங்கள் வைத்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். அதில் ‘வெற்றிடத்தை நிரப்ப வரும் விவேகமே’ என குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அஜித் வாழ்த்து பெறுவது போலவும், பின்னணியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நிற்கும் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியலுக்கு வருவதாகவோ, அரசியல் பற்றிய தனது கருத்துகளையோ இதுவரை அஜித் தெரிவித்தது இல்லை. அவரது திரைப்படங்களிலும் அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றதில்லை. முன்பு ஒருமுறை…

Read More

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்க திருச்சியில் மாபெரும் மாநாடு: தமிழருவி மணியன் அறிவிப்பு

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்க திருச்சியில் மாபெரும் மாநாடு: தமிழருவி மணியன் அறிவிப்பு

ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”பொது வாழ்வின் புனிதத்தைப் பாழ்படுத்தி, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தி, மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த தொழிலாக உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த ஐம்பது…

Read More

நடிகை ஓவியாவுடன் திருமணம் வதந்தி ? நடிகர் சிம்பு மறுப்பு

நடிகை ஓவியாவுடன் திருமணம் வதந்தி ? நடிகர் சிம்பு மறுப்பு

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவி‌ஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள். அப்போது தனக்கு ஆறுதலாக…

Read More

சிவாஜி சிலை அகற்றம்: கமல்ஹாசன் கருத்து

சிவாஜி சிலை அகற்றம்: கமல்ஹாசன் கருத்து

கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சிலை நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: ‘சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன். மனதிலும் பதிந்தவர்….

Read More

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது கமல்ஹாசன் பேட்டி

அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது கமல்ஹாசன் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:- எப்போது மாறவில்லை என்று சொல்கிறீர்கள்? சினிமாவில் பெரும் புரட்சியாளர் என்கிறார்கள், அதுவே போதுமானது. அதைக்கூட செய்யாதவர்கள் இருக்கிறார்களே, அந்தவகையில் இது புரட்சிதானே? சினிமா தான் உயிர்மூச்சு என்று சொல்பவனை, நீ நடிச்சுடுடா பார்க்கலாம், இனி இந்த தொழிலில் நீ இருக்க முடியுமா என்று சவால் விடுகிறார்கள் என்றால் அது அவனுக்கு மரணம் போல தானே? பாரதியார் பேனாவை பிடுங்கி, இனிமேல் நீ எழுதக்கூடாது என்று கூறினால், அவர் வாயால் முணுமுணுத்துக்கொண்டு இருப்பார். அதனை தாண்டியும் நான்…

Read More

வசூல் களம்: 2017 முதல் அரையாண்டில் கரைசேர்ந்த படங்களின் பின்னணி!

வசூல் களம்: 2017 முதல் அரையாண்டில் கரைசேர்ந்த படங்களின் பின்னணி!

ஜனவரி 6 அன்று வெளியான ‘பெய்யென பெய்யும் குருதி’ படத்திலிருந்து ஜூன் -30 அன்று வெளியான ‘யானும் தீயவன்’ வரை கடந்த 6 மாதங்களில் சுமார் 100 படங்கள் வெளியாகியுள்ளன. சிக்கல்கள், பெரிய நாயகர்கள் படங்களின் தோல்வி, புதுமுக இயக்குநர்களின் எழுச்சி எனப் பல விஷயங்களைக் கடந்துள்ளது தமிழ்த் திரையுலகம். பெரிய படங்களின் தோல்வி விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ‘பைரவா’, ‘சி3’, ‘போகன்’, ‘காற்று வெளியிடை’, ‘ப.பாண்டி’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘வனமகன்’, ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் ‘ப.பாண்டி’ மட்டுமே போட்ட முதலீட்டுக்கு மோசமில்லாமல் வசூலித்தது. மற்ற அனைத்துப் படங்களாலும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமே. ‘கவண்’, ‘ப.பாண்டி’, ‘கடுகு’, ‘இவன் தந்திரன்’ ஆகிய…

Read More

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது ஷங்கர் – ரஜினி இணையும் ‘2.0’ மற்றும் விஜய் இயக்கத்தில் ‘கரு’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார்கள். தற்போது புதுமுக இயக்குநர் திலீப்குமார் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இக்கதை முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையாகும். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘கோ கோ’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட…

Read More

அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே ரசிகர்கள் தேவை. அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும். இவ்வாறு அதில்…

Read More

புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள்

புகார்களை நிரூபிக்கும்படி அமைச்சர்கள் கேட்பதால் ஊழல் ஆதாரங்களை அரசுக்கு அனுப்புங்கள்

நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று டுவிட்டரில் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:– வணக்கம். இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம். ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு.ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ…

Read More

புதுமுக நடிகர்களுடன் பிரபுசாலமன் உருவாக்கும் ‘கும்கி 2’

புதுமுக நடிகர்களுடன் பிரபுசாலமன் உருவாக்கும் ‘கும்கி 2’

பிரபுசாலமன் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க ‘கும்கி 2’ உருவாக உள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘தொடரி’ படத்தைத் தொடர்ந்து, பிரபுசாலமன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது அப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை தனது இயக்கத்தில் வரவேற்பைப் பெற்ற ‘கும்கி’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் இல்லாமல் முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாக்க முடிவு செய்துள்ளார். முழுக்க காதல் கதையாக இருந்தாலும், கதையின் மையக்கரு யானையை வைத்திருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ‘கும்கி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார், இதற்கும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்….

Read More
1 16 17 18 19 20 32