இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம்

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை: மாதவன் புகழாரம்

இந்தியாவில் மணிரத்னம் போன்று ஒரு இயக்குநரில்லை என்று நடிகர் மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். ஜிஎஸ்டி வரித் தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருவதால், ஜூலை 7-ம் தேதி வெளியீடாக இருந்த ‘விக்ரம் வேதா’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த மாதவன் அளித்துள்ள பேட்டியில் மணிரத்னத்துக்கு அவருக்கும் இடையேயான நட்பைப் பற்றி தெரிவித்துள்ளார். அதில் மாதவன் கூறியிருப்பதாவது: அவரோடு பல படங்கள் செய்துவிட்டேன். அனைவருமே அவரை மணி என்று தான் அழைப்பார்கள். என்னால் அப்படி அழைக்க முடியவில்லை. நான் யோசிக்கும் போது கூட மணியிடம் என்ன…

Read More

ஜிஎஸ்டியால் திரைத்துறைக்கு பாதிப்பு; நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது தீர்வாகாது: நடிகர் சரத்குமார் கருத்து

ஜிஎஸ்டியால் திரைத்துறைக்கு பாதிப்பு; நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது தீர்வாகாது: நடிகர் சரத்குமார் கருத்து

ஜிஎஸ்டியால் திரைப்படத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உச்ச நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க கோரிக்கை விடுப்பது பிரச் சினைக்கு தீர்வாகாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகரு மான சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சரத்குமார், தமது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தளக்காவூர் உசுலாகுடிக்கு நேற்று வந் திருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டியால் குழப்பமான சூழ் நிலை உள்ளது. ஒரே வரி என்பது சிறப்பான திட்டமாக இருந்தாலும், மக்களை சரிவர சென்றடைய வில்லை. சில இடங்களில் வர்த் தகம் ஸ்தம்பித்துள்ளது. திரைப் படத் துறையில் வரிவிதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாநில அரசு 30 சதவீதம், மத்திய அரசின்…

Read More

புதுமைக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கிருஷ்ணா நேர்காணல்

புதுமைக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கிருஷ்ணா நேர்காணல்

‘‘என் முதல் படத்தில் இருந்து இதுவரை ஒரு ரசிகனின் மனநிலையில் இருந்தே கதை கேட்டு நடித்து வருகிறேன். அதேபோல, தற்போதைய சினிமாவின் போக்கை பார்க்கும்போது முடிவில் கதை மட்டும்தான் ஜெயிக்கிறது. கதையை நம்புவதால்தான் ஒரே நேரத்தில் சோலோ ஹீரோவாகவும், இரட்டை ஹீரோக்கள் படத்திலும், மல்டி ஸ்டார்ஸ் படங்களிலும் கவனம் செலுத்த முடிகிறது’’ என்கிறார் கிருஷ்ணா. விரைவில் வெளிவரும் ‘பண்டிகை’ படத்தைத் தொடர்ந்து ‘கிரகணம்’, ‘வீரா’, ‘விழித்திரு’, ‘களரி’ என்று அவரது நடிப்பில் வரிசையாக படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கின்றன. அவருடன் ஒரு நேர்காணல்.. திருவிழா, பண்டிகை என்றால் கொண்டாட்ட மான மனநிலை இருக்கும். நீங்கள் நடித்த ‘பண்டிகை’ படத்தின் டிரெய்லர், போஸ்டர்களை பார்க்கும்போது ஆக்‌ஷன் களம்…

Read More

படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

ஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை அதிகாரிக்காததன் காரணத்தை விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். தணிக்கையில் ’ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். ‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் “நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும், ஏன் பெரியளவுக்கு சம்பளத்தை அதிகரிக்கவில்லை” என்ற கேள்விக்கு கூறியிருப்பதாவது: மாதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உடம்பைக் குறைத்தீர்கள் என்று கேட்டேன். ‘திருப்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், உணவைக் குறைத்தேன் என்றார். நானும் திருப்தி என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறேன். என் படங்கள் பெரிய வெற்றியடைய…

Read More

புதிய சம்பள பட்டியல் கதாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது

புதிய சம்பள பட்டியல் கதாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது

நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்பதாக தகவல். இவர் 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வந்தார். அவர் மார்க்கெட்டை வேறு எந்த நடிகையாலும் எட்டி பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தார். தமிழ் தவிர தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கிறார். தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன், மற்றும் ஒரு தெலுங்கு படம் என்று 5 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் புதுமுக நடிகர்களுடனும் ஜோடி சேருகிறார். தெலுங்கு படங்களில் பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் சம்மதிக்கிறார். அனுஷ்கா…

Read More

திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் விஷால் பேட்டி

திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் விஷால் பேட்டி

சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  தமிழகத்தில் நாளை திரையரங்குகள் மூடப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜிஎஸ்டி, சினிமாத்துறை பிரச்சனைகள் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது: டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தோம். திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்ட அறிவிப்பு வருத்தமளிக்கிறது. தயாரிப்பாளர்களை…

Read More

‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல: இயக்குநர் தகவல்

‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல: இயக்குநர் தகவல்

அஜித் நடித்தில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். ‘விவேகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பவுள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதற்கு படக்குழு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது, “விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவில்லை. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா. மேலும், அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்…

Read More

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம்: சோகத்தோடு டிவி பார்க்கும் நிஷா

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம்: சோகத்தோடு டிவி பார்க்கும் நிஷா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். கடந்த சில நாட்களாக அவரைப் பிரிந்திருப்பது வருத்தமாக இருக்கிறது என்கிறார் அவரது காதல் மனைவி நிஷா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘தலையணைப் பூக்கள்’ தொடரின் நாயகியான நிஷா கூறியதாவது: ‘‘கணேஷ் வெங்கட்ராமைப் பிரிந்திருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை ஒரு வாரமாக தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துவருகிறேன். நானாவது, தொலைக்காட்சியில் அவரைப் பார்க்க முடியும். அவரால் அதுகூட முடியாது. கடந்த புதன்கிழமை என் பிறந்தநாள். அதையொட்டி இமயமலையில் உள்ள சில இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். திடீரென ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில்…

Read More

ரஜினி அரசியல் பிரவேசம்: தனுஷ் பதில்

ரஜினி அரசியல் பிரவேசம்: தனுஷ் பதில்

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பதிலளித்தார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். தாணு வெளியிடவுள்ளார். ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். இதில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் தனுஷ். அதில் “‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்துக்கும் இரண்டம் பாகத்துக்கும் சில ஒற்றுமைகளும், வித்தியாசங்களும் உள்ளன. இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தை…

Read More

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர் பாபிராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், ராஜசேகர் உள்பட 64 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:– 72 மாவட்ட தலைவர்களின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 8 பேர் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் குறித்து தொலைபேசியில் தெரிவித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை,…

Read More
1 17 18 19 20 21 32