நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரெய்டு

நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது.இந்த அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வந்த மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர்சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. விஷாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை. மத்திய கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விஷாலின் தயாரிப்பு நிறுவன ஜிஎஸ்டி முறையாக செலுத்தப்பட்டதா என ஆய்வு செய்தனர்.

Read More

ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு

ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு

விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. மெர்சல் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன் பேசும்போது, “சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை” என்று வசனம் பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சட்டங்களை மதிக்காமல் திரைப்படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். “தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள்…

Read More

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு பிக்பாஸ் இறுதிப்போட்டியில் அறிவிக்கப்பட்டது, இதை தொடர்ந்து தற்போது இப்படம் நின்றுவிட்டதாகவும், இதில் கமலுக்கு பதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதை அறிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில் ‘ஷங்கர் இயக்கத்தில் கமல் சார் இந்தியன் 2 நடிப்பது உறுதி. ஷங்கர் அவர்கள் 2.0 இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகவுள்ளார், அவை முடிந்த பிறகு அடுத்து இந்தியன்-2வில் கவனம் செலுத்துவார், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

Read More

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். தினத்தந்திக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்து இருந்தார். அரசியல் குறித்து பேசிவரும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடப்பதாக…

Read More

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஓ. பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்பது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை…

Read More

நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவரும் தமிழ்த் திரைப்படமான “விக்ரம் வேதா” வில் கதாநாயகியாக மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு நடித்து தமிழ்த் திரை இரசிகர்களை கவர்ந்தவருமான நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் தனது கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது மிகவும் புத்திகூர்மையான பதில்களை தனது கன்னட மொழி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்தார். காரணம் இவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று மிசிகாகா நகரில் திரையிடப்பட்ட ஒப்பரேசன் அலமேலம்மா என்னும் கன்னட திரைப்படத்தின் முதல்காட்சிக்கு அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் திரையரங்கிற்கு வருவதற்கு முன்னர் மேற்படி திரைப்படம் இடைவேளை…

Read More

தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்: விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்: விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று ‘கருப்பன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார். பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும் முடிவும் அன்பு தான். முன்பின் தெரியாத கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து வாழும் போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரமும் கூட. அதை அழகாக சொல்லியிருப்பது தான் ‘கருப்பன்’. என் மனைவியாயக தான்யா மிக அழகாக நடித்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’ வெளியாகும்…

Read More

இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? – ரசிகரின் கேள்விக்கு ஓவியா பதில்

இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? – ரசிகரின் கேள்விக்கு ஓவியா பதில்

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது முதலே அவருக்கு பெரும் ஆதரவு பெருகியிருப்பதால், மக்கள் கூட்டம் கடுமையாக காணப்பட்டது. இவ்விழாவில் ஓவியா பேசியதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அதைப் பற்றி பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் விழாவில் என்னைக் காணலாம். மேலும், அந்நிகழ்ச்சியில் எனக்கு அனுயாவை ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய தோழி. இந்தக் காலத்தில் மக்களிடையே இவ்வளவு பெரிய அன்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம். எனது கதாபாத்திரத்தால் அந்த அன்பு கிடைத்திருப்பதில் மிகவும்…

Read More

ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர் -கமல்ஹாசன்

ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனக்கு உறவினர்கள் அதுபோல் கெஜ்ரிவால் எனது உறவினர் -கமல்ஹாசன்

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் கேரள மாநிலம் சென்று அங்கு முதல் மந்திரி பிணராய் விஜயனை சந்தித்தார். இந்தநிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்திக்க உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த்…

Read More

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும்-விவேகம்

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும்-விவேகம்

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என “விவேகம்” அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகளை வெடிக்கச்செய்து ஒரு நிலநடுக்கத்தை உருவாக்கும் கும்பல், மேலும் இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிடுகிறது. அதனைத் தடுக்க செர்பியாவில் உள்ள ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை (உளவுப் படை?) ஒன்று களமிறங்குகிறது. அதன் சார்பில் செயலில் இறங்குகிறார் அஜய்குமார். நடாஷா என்ற ஹேக்கரால்தான் அதனை தடுக்க முடியும் என அவளைத் தேட, அவள் கொல்லப்படுகிறாள். இந்தக் கட்டத்தில் ஆர்யன் உள்ளிட்ட…

Read More
1 15 16 17 18 19 32