‘2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்’; நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ஆலந்தூர், கபாலி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி மும்பை சென்றார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மீண்டும் சந்திப்பேன் காலா படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற 24-ந் தேதி மும்பை செல்ல இருக்கிறேன். இன்னும் 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளேன். இவ்வாறு…
Read More









