மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்
பா.ரஞ்சித் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு காலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா,…
Read More









