தனுஷின் `விஐபி 2′ படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய ரஜினிகாந்த்

தனுஷின் `விஐபி 2′ படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய ரஜினிகாந்த்

கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘வேலையில்லாப் பட்டதாரி’ படத்தின் இந்நிலையில், இப்படத்தின் 2-வது பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.    இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடித்துள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கஜோல் நடித்துள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி’ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஜுலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்தது. இதில்…

Read More

நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை

நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை

நடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.   பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான தருணத்திலேயே இவர்கள், இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய…

Read More

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஏப்.6-ல் விஷால் பதவியேற்பு

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஏப்.6-ல் விஷால் பதவியேற்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஏப்ரல் 6-ம் தேதி பதவியேற்கவுள்ளார் விஷால். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ பெரும் வெற்றி பெற்றுள்ளது. புதிய நிர்வாகிகளின் பதிவியேற்பு விழா ஏப்ரல் 6-ம் தேதி மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது, “இது முக்கியமான தேர்தல். எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம் ஒரு தனி மனிதனுக்கானது அல்ல. ஒரு அணிக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. அந்த அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்தவர்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள்…

Read More

மெரீனாவில் மீண்டும் புரட்சி வெடிக்கும்: நடிகர் ராகவா லாரன்ஸ்

மெரீனாவில் மீண்டும் புரட்சி வெடிக்கும்: நடிகர் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கான மெரீனா போராட்டம் என்னால் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. உங்களுடன் நான் இருந்ததால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றது. நான் இத்துடன் நின்றுவிடவில்லை. விவசாயிகளுக்கான போராட்டத்தை 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டேன். தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் நலனுக்காக நான் ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். “விவசாயிகள் உயிர் காப்போம். சொல்லாதே செய்’ என்ற பெயரில் அந்தத் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளேன். இதற்கான இணையதளமும் தொடங்கப்படும். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் விவசாயிகளுக்காக உதவி செய்யுங்கள். உங்களால் முடிந்த தொகையை அந்தத் திட்டத்துக்குக் கொடுங்கள். ஒரு மாணவர் ஒரு ரூபாய் கொடுத்தால்கூட போதும்….

Read More

நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்

நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்

இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார். இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்…

Read More

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் இரு தரப்பின் செயல்பாடுகள் தனக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிபதி தெரிவித்தார். மேலூர் அருகே மலம்பட் டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பது தொடர்பாக…

Read More

ரஜினி இலங்கை வந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!

ரஜினி இலங்கை வந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!

கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்திருந்தால், தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்’ என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணிமுத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று, வீடுகளை வழங்க இருந்தார். ஆனால் ‘ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து பேசி வந்தனர். ரஜினியுடன் போனிலும் பேசி, இலங்கை போக வேண்டாம் என்று கூறியதால் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார். இது தொடர்பாக…

Read More

இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி வேண்டுகோள்

இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி வேண்டுகோள்

நான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளை கட்டியுள்ளார். சுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள…

Read More

ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக சார்பாக போட்டியிடும் கங்கை அமரன், அன்று ரஜினியைச் சந்தித்ததையடுத்து கங்கை அமரனை ரஜினி ஆதரிப்பார் என்ற பரவலான எதிர்பார்ப்பு எழுந்தது. கங்கை அமரனும் ரஜினி தனக்கு ஆதரவளிப்பார் என்பது போல் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினி அறிவித்துள்ளார்.

Read More

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகையின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது. இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த்….

Read More
1 21 22 23 24 25 32