சிவசேனா அல்ல ‛சோனியா சேனா’: நடிகை கங்கனா ரணாவத்
சிவசேனா, நடிகை கங்கனா ரனாவத் இடையிலான மோதல் போக்கின் உச்சமாக, நடிகையின் அலுவலகம் நேற்று இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, பால் தாக்கரே, கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம், அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாகவும், சிவசேனா கட்சியை ‛சோனியா சேனா’ எனவும் கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும், திரைமறைவில் இருக்கும் மாபியாக்கள் குறித்தும் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ‛மும்பை போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை’ எனவும், ‛மும்பை பாதுகாப்பற்ற நகரம்’ எனவும் விமர்சித்திருந்தார். இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்…
Read More









