முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு தடவை மரணித்தார்
வெள்ளித்திரைகளில் மயிலாகஆடியும் குயிலாகப் பாடியும் திரைரசிகர்களையும் முன்னணிக் கதாநாயகர்களையும் குதூகலப்படுத்தியவர். மிகக்குறுகியகாலத்தில் எம்ஜிஆர் என்னும் ஆளுமையின் கவனத்திற்குஉள்ளாகிஅவரோடு இணைந்துதிரையிலும் அரசியல் உலகிலும் உழைத்துஎம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் ஸ்தாபித்தஅண்ணாதிமுகவிற்குஉறுதியைகொடுத்தவர். பல் மொழிஆற்றலும் பக்குவமானபேச்சுக்களும் உயர்வைதந்துநின்றனஅவருக்கு. ஆமாம்! அவரும் ஒருஆளுமைதான். அந்தகோபுரம் சரிந்து சில வாரங்களேஆகின்றன. அவர்தான் முன்னாள் தமிழக முதல்வரும் அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உலகத்தின் கண்கள் உற்று நோக்கிய ஒரு அதிசயம். கூடி நின்றமக்கள் வெள்ளம். அவர்கள் சிந்திய கண்ணீர், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம். இந்தியாவின் மத்திய மாநிலஅரசுகள் தங்கள் பிரதிநிதிகளை அவரது இறுதிப் பயணத்திற்கு அனுப்பிவைத்து மரியாதை செய்த இராஜயோகம். இவையனைத்தும்…
Read More


