கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கியது. வருகிற 18ம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில், உலக நாடுகளில் இருந்து 4,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். பிரேசிலின் ஜனாதிபதி Michel Temer தொடங்கி வைக்க, பாரம்பரிய சாம்பா இசையுடன் விழா கோலாகலமாக ஆரம்பமானது. இதனை தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடந்தது, இந்த விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More



