சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்
திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….
Read More









