Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்
கெரில்லாயிசத்தின் இருப்புநிலை கணக்கு குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும். வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கெரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம். “நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றி பேசுகின்றபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து…
Read More








