கோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு

கோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில், தமிழகத்தில் கோவில் இடத்திற்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கோவில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம்.  இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து பேசிய அவர், மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் அதனை…

Read More

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய…

Read More

ஆயுதபூஜை பண்டிகை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.  சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும். இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இந்த பேருந்துகள், வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.  இதன்படி, தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்…

Read More

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும், ஆப்கன் மக்களும் வெளியேற முயற்சித்தனர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தலீபான்கள் அனுமதி அளித்தனர். இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென் சால்டர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தார். அவர் காபூலில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது தனது தொழில்நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி செல்ல பென் சால்டர் உதவி செய்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் எல்லையில் அவர்கள் அனைவரையும் தலீபான்கள் தடுத்து நிறுத்தினர்….

Read More

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

உத்தர பிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், லகிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, இன்று லகிம்பூர் கேரி மாவட்டம் வர திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, சிதாபூர்…

Read More

அசாம்: கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து இடைநீக்கம்…

அசாம்: கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து இடைநீக்கம்…

அசாம் மாநிலத்தின் டரங் மாவட்டம் சிபஜ்கர் பகுதியில் கடந்த 23-ம் தேதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்துவந்த மக்களை போலீசார் அகற்ற முயற்சித்தபோது வன்முறை வெடித்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருந்த மக்களுக்கும் போலீசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேசத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று 1979 முதல் 1985 வரை போராட்டங்கள் நடைபெற்றது. அதில், 1983-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேரை சிபஜ்கர் பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் கொலை செய்ததாக ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றுள்ள சில கூட்டணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் கூறினர்….

Read More

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியிலான வன்முறை வெடித்தது. குறிப்பாக, பாஜக கட்சி, திரிணாமுல் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் கொலை, கூட்டுபாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடந்து விசாரணையை தொடங்கிய சிபிஐ மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு…

Read More

சஹீன் புயல்:தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சஹீன் புயல்:தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள சஹீன் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 4ம் தேதி வரை பீகார்,  மேற்கு வங்காளம்,  சிக்கிம்,  தமிழ்நாடு,  கேரளா,  கர்நாடகா,  குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள்பகுதிகள் உட்பட தமிழகம், கேரளாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். இதனால் அக்டோபர் 1 முதல் 4ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அக்டோபர் 4ம் தேதி காலை வரை குஜராத் கடல் பகுதி…

Read More

தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை – புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை – புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர் திலகராணி(45). இவருக்கு, 5 மகன்கள் உள்ளனர். மது அருந்தி கொடுமை செய்த கணவனை 2006ம் ஆண்டு திலகராணி கொலை செய்தார். அப்போது, ஐந்தாவது மகன் முத்து, நான்கு மாத கருவாக வயிற்றில் இருந்தான். இதில் திலகராணி, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, விடுதலையானார். தாய் சிறை சென்றது முதல் தாத்தா வீட்டில் மற்ற 4 மகன்களும் வசித்து வந்தனர். தந்தையை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்று வந்ததால் தாயுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தனர். திலகராணியுடன், சிறையில் இருந்த போது, பிறந்த 5வது மகன் முத்து மட்டும் இருந்தான். அப்பகுதியில் உள்ள கணவனுக்கு சொந்தமான வீட்டில்,…

Read More

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்-மந்திரி பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும்,வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி…

Read More
1 74 75 76 77 78 256