இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகாரா பரிஷித் மடத்தின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றிய காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில், நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி…

Read More

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

கஜகஸ்தான்: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

கஜகஸ்தான்: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

கஜகஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது. இதற்கிடையில், அந்நாட்டின் அல்மெடி மாகாணம் அக்பலக் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த நபரை அந்த வீட்டை விட்டு வெளியேற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த நபரை வீட்டு விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவுடன் கோர்ட்டு அதிகாரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்த அந்த நபர் போலீசார் மற்றும் கோர்ட்டு அதிகாரி மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் பொதுமக்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அக்பலக் மாவட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு…

Read More

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.  ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: -பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து…

Read More

இந்திய மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ .2,427 கோடியை விடுவித்துள்ளது

இந்திய மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ .2,427 கோடியை விடுவித்துள்ளது

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறை விடுவித்துள்ளது. இதன்படி 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கான பங்காக ரூ.2,67.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் முதல் தொகை ஆகும். இந்த நிதியானது குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது. அத்துடன் தொகை வரப்பெற்ற 10 நாட்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தொகையை மாற்ற வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு…

Read More

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என்று  சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பலர் சந்தேகம் எழுப்பியதால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை தொடர்ந்த நிலையில்,  தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்…

Read More

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

கஞ்சா கும்பல் சிறையில் அடைப்பு

புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் குருசுக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு 3 பெண்களும், 4 ஆண்களும் இருந்தனர். விசாரணையில் அவர்கள், ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த உக்விஷாகா (வயது 32), முகேயோ ஆலிவர் (30), ஆக்சல், நபுகீர ஹெலன் (25), நன்டன்கோ மேரி (27), இனிமகஸ்வி மொரிட்டி (25) மற்றும் குருசுக்குப்பத்தை சேர்ந்த விவேக் (30) என்பதும், சட்டவிரோதமாக தங்கியிருந்து, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.51,120 ரொக்கப்பணம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்படட 7 பேர்…

Read More

தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு – தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு – தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் பொருளாதாரப் பிரிவிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 741 கோடி ரூபாயாக இருந்தது என்றும் அதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 549 கோடி ரூபாய் வரி மூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த மொத்த வருவாயில் தமிழக அரசால் ஈட்டப்பட்ட வருவாய் 69 சதவீதமாக இருந்தது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி., வணிக வரி, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகள் மீதான வரிகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டதில் தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி…

Read More

சன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

சன்சத் தொலைக்காட்சி- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

கடந்த பிப்ரவரி மாதத்தில், லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டது.  புதிதாக சன்சத் என்ற தொலைக்காட்சி தொடங்கவும்  முடிவெடுக்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர். சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்,கொள்கைகளின் அமலாக்கம் போன்றவை ஒளிபரப்பாகும். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

Read More

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்….

Read More
1 76 77 78 79 80 256