தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆக.23-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா். காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. 23 நாள்கள் நடைபெற்ற தமிழக…

Read More

நீட் சட்ட மசோதா நிறைவேற்றம்: அ.தி.மு.க, பா.ம.க., ஆதரவு; பா.ஜ.க வெளிநடப்பு

நீட் சட்ட மசோதா நிறைவேற்றம்: அ.தி.மு.க, பா.ம.க., ஆதரவு; பா.ஜ.க வெளிநடப்பு

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் பேரவையில் இன்று காலை மசோதாவை முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீதான் விவாதம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார். இதற்கிடையே, நீட் தேர்வால் பல நன்மைகள் இருப்பதாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகளுக்கும், எங்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதாக கூறி பேரவையிலிருந்து வெளியேறினர். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ…

Read More

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3-வது நாளாக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3-வது நாளாக அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட உயர்ந்துள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;  தமிழகத்தில் இன்று 1631-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,523- ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 592 ஆக  உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 197- மாதிரிகள்…

Read More

கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 33 மாணவர்களை பரிசோதனை செய்ததில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 3 மாணவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத நிலையில் பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. சுத்தம் செய்வதற்காக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Read More

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி இடையே சட்டசபையில்  காரசார விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் , ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார். இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான்…

Read More

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தசூழலில் சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில்…

Read More

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு  சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது.. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது…

Read More

பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மாணவர்கள் குழுவாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர்கள் வந்து செல்வதற்கு தனித்தனி…

Read More

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை…

Read More

பதிவாளர் எச்சரிக்கை …! திருமண தகவல் இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் கும்பலால் கைது செய்யப்பட்டனர்

பதிவாளர் எச்சரிக்கை …! திருமண தகவல் இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் கும்பலால் கைது செய்யப்பட்டனர்

திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட புதுடெல்லியில் வசித்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா  ரசகொண்டா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் ஒமோரிலேவா (31) மற்றும் ஒசாஸ் ப்ரீடோ (39). இவர்கள் அனைவரும்  நைஜீரியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் புதுடெல்லி திலீப் விஹார், நிலோதி பகுதியில், வசித்து வந்தனர். மேலும் கனோன் எவர்ட் மற்றும் கான்டே மேரி ஆகிய இரண்டு  நபர்கள் தலைமறைவாக  உள்ளனர். சுற்றுலா விசாவில்  இந்தியா வந்தவர்கள் டெல்லியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மணப்பெண், மணமகன் தேடுபவர்களே இவர்கள் குறி.   போலி…

Read More
1 77 78 79 80 81 256