தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: சட்டசபையில் அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறினார். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 10 இடங்களில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு…

Read More

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக, 30,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,81,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 18,997 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,11,625 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20,134 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,66,397 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்…

Read More

அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எல்டொரோடா வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து இருப்பதால் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் கருகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயால்  சுமார் 42,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 59 கோடியைக் கடந்தது. மொத்தம் 65,52,748 முகாம்களில் 59,55,04,593 தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று 60 கோடி என்ற எண்ணிக்கையை கடந்ததாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ இந்தியா நிர்வாகம்: 85 நாட்களில் 10 கோடி டோஸ், 45 நாட்களில் 20 கோடி டோஸ், 29 நாட்களில் 30 கோடி டோஸ், 24 நாட்களில் 40 கோடி, 20 நாட்களில் 50 கோடி. இப்போது, 60 கோடி தடுப்பூசியை முடிக்க 19 நாட்கள் ஆனது” என்று மாண்டவியா பதிவிட்டுள்ளார். நம்…

Read More

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ரூ.2,097 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும். 12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும். ரூ.233 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும். சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும். பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு…

Read More

தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை…

Read More

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அங்குள்ள வெளிநாட்டினர் மட்டுமல்லாது உள்நாட்டினரும் ஆப்கா னிஸ்தானில் இருந்து வெளியேறினால் போதும் என்ற மன நிலையில் உள்ளனர். இதனால் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. விமான நிலையத்துக்கு வெளியேயும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்பினால் போதும் என்ற நிலையில், விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே…

Read More

ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைந்து வந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு…

Read More

தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை – சுகாதாரத்துறைச் செயலாளர்

தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை – சுகாதாரத்துறைச் செயலாளர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் அவர் கூறினார்: – இன்று 6.93 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளன. இதுவரை 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பல நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரு சதவீத மக்கள் மட்டுமே கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். கோயம்புத்தூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் போன்ற 17 மாவட்டங்களில், 1% க்கும் அதிகமான மக்கள் அதிகமாக தடுப்பூசி போடப்படுகிறார்கள் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி வருகை அதிகரித்துள்ளது மற்றும் தடுப்பூசி மீதான ஆர்வம் குறைந்தது. தமிழகத்தில் போலி அரசு…

Read More

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 1,668- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19,621- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,887- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,66,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்துள்ளது.

Read More
1 79 80 81 82 83 256