பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இந்தநிலையில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பப்ஜி மதன், மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்தனர். பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை. 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறமாட்டார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Read More

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன. முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய்…

Read More

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் கூறப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலேயே இன்று கோவை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி இன்று சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார்…

Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், காலை 6 மணி முதல் சோதனை . சுமார் 12 மணி நேரம் நடைபெற்று வந்த இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் ஒரு இடத்திலும், கோவையில் 2 இடங்களில் தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்டுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச…

Read More

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.

Read More

வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு

வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு

உலகம் முழுவதும் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகத்தை தட்ப வெப்பத்தை மாற்றி மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை அடுத்து ஐநா., முன்னதாக இதுகுறித்து தகவல் வெளியிட்டது. காட்டுத்தீ பரவுதல், எரிமலை வெடித்தல், புயல், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்வதும், இது பல சிறிய தீவுகளுக்கு ஆபத்தாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை அடுத்து உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் உலக தட்பவெட்பம் 1.5 டிகிரி செல்சியஸ்…

Read More

அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடல்நலக்குறைவால் , மதுசூதனன் நேற்று (ஆக.5ம் தேதி) காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காலை 8 ;15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி , ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும்…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் அரையிறுதியில் விளையாடினர். இந்த போட்டியில், 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்து உள்ளார். இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி கண்டுள்ள பூனியா, நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.

Read More

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

டோக்கியோ, 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆடவர் ஆக்கி அணி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
1 81 82 83 84 85 256