ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு – ஜனாதிபதி ஜோ பைடன்
ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு ஈராக் அறிவித்தது. இருப்பினும் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடரும் நிலையில் அவர்களை எதிர்த்து சண்டையிட அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.இதற்கிடையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என ஈராக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த…
Read More








