பெண்களின் இடுப்பை வர்ணித்து கண்டனங்களுக்கு உள்ளான லியோனிக்கு தி.மு.க.,வின் கல்வித் துறைக்கு பொறுப்பு !!

பெண்களின் இடுப்பை வர்ணித்து கண்டனங்களுக்கு உள்ளான லியோனிக்கு  தி.மு.க.,வின் கல்வித் துறைக்கு பொறுப்பு !!

தமிழக பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. லியோனி ஆசிரியராக பணியாற்றியவர் தான். பட்டிமன்றம் வாயிலாக பிரபலமாகி, பின் தி.மு.க.,வில் இணைந்தவர். இவரது அரசியல் பேச்சு ரசிக்கத்தக்கதாக இருக்காது; அநாகரிகமாக இருக்கும். இதனால் தேர்தல் காலத்தில் இவர் மீது அவமதிப்பு வழக்குகள் நிறைய போடப்படும். கடந்த தேர்தல் பிரசாரத்தில், பெண்களின் இடுப்பை பற்றி வர்ணித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானார். இப்படிப்பட்ட ஒருவரை, பாடநுால் நிறுவனத்துக்கு தலைவராக நியமித்தால் கல்வித் துறையின் நிலை என்னவாகும்? பாடநுால் நிறுவனத்தின் பணி, அறிவை வளர்க்கும் புத்தகங்களை தயாரிப்பது. புதிதாக பொறுப்பேற்றுள்ள லியோனி, ‘பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய அரசு’ என்ற…

Read More

செப்., 12ல் ‘நீட்’ தேர்வு இன்று ‘ஆன்லைன்’ பதிவு !!

செப்., 12ல் ‘நீட்’ தேர்வு இன்று ‘ஆன்லைன்’ பதிவு !!

‘நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு, செப்டம்பர் 12ல் நடத்தப்படும்’ என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்; இதற்கான ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவ படிப்புகள் மற்றும் பி.எஸ்சி., நர்சிங் போன்றவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மே முதல் வாரத்தில் இந்த தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, கொரோனா இரண்டாம் அலையால் தேர்வு தள்ளிப் போனது. இந்நிலையில், ‘செப்., 12ல், நாடு முழுதும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும்’ என, மத்திய கல்வி அமைச்சர்…

Read More

இந்திய மருத்துவர் சங்கத்தின் கிறிஸ்துவ தலைவர் கூறினார் – ஹிந்து திருவிழாக்கள் நடத்தினால் ஆபத்து

இந்திய மருத்துவர் சங்கத்தின் கிறிஸ்துவ தலைவர் கூறினார் – ஹிந்து  திருவிழாக்கள் நடத்தினால் ஆபத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திருவிழாக்களை நடத்துவது நல்லதல்ல, அது மிகவும் அபாயகரமானதாக அமைந்துவிடலாம் என, இந்திய மருத்துவர் சங்கத்தின் கிறிஸ்துவ தலைவர் ஜெயலால் எச்சரித்துள்ளார். கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் நேற்று கூறியதாவது:கொரோனா வைரசின் இரண்டாம் அலை குறைந்தாலும், மூன்றாம் அலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, நாம் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். நாட்டின் பல் வேறு பகுதிகளில் கொரோனாவின் தீவிரத்தை உணராத மக்கள், சமூக இடைவெளியை சிறிதும்…

Read More

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதியில்லை

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதியில்லை

‘கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்போவதில்லை’ என, கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கூறுகையில், ‘கனடாவில் தற்போது 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப்போவதில்லை. எதிர்வரும் காலங்களில் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்’ என்றார்.

Read More

திருமணத்துக்கு 20 பேர்; மது வாங்க 500 பேருக்கு அனுமதியா?

திருமணத்துக்கு 20 பேர்; மது வாங்க 500 பேருக்கு அனுமதியா?

கேரள அரசு சார்பில் நடத்தப்படும் பெவ்கோ மதுபானக் கடைகள் முன், மது வாங்க ஏராளமானோர் வரிசையில் நிற்கின்றனர். இதை ஒழுங்குபடுத்தக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், கோவிட் சூழலில் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது வாங்குவது குறித்து உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோவிட் பரவலைத் தடுக்க திருமண விழாக்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றில் 20 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுவாங்க மட்டும் மதுக்கடைகள் முன் 500க்கும் மேற்பட்டோர் வரிசையில், சமூக…

Read More

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் !!

டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் !!

கூகுள், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். அவர் இந்த நிறுவனங்களின் தணிக்கைக்கு பலியாகி விட்டதாக கூறி உள்ளார். இந்த வழக்கில் அந்த 3 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளார். இந்த வழக்கு, பேச்சுரிமைக்கு மிக அழகான முன்னேற்றமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிய டிரம்ப், வன்முறையை விளைவிக்கக்கூடிய கருத்துகள் மற்றும் பொய்யான தகவல்களை அடிக்கடி பரப்பியதாகக் கூறிய குற்றச்சாட்டுகளால் அங்கு அவரது செயல்பாடுகள் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார் !!

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார் !!

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார் !! தமிழக பா.ஜ., தலைவராக உள்ள முருகன், மத்திய இணைஅமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக அண்ணாமலை இன்று நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 இறுதியில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின், புதிய தலைவராக எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என, பலரது பெயர்கள் கூறப்பட்டன. எதிர்பாராத வகையில், தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஆணைய துணை தலைவராக இருந்த முருகன், தமிழக பா.ஜ., தலைவராக, 2020 மார்ச்சில் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று, பொறுப்பேற்றார். தமிழக பா.ஜ.,வுக்கு யாரை புதிய…

Read More

ஹைத்தி அதிபர் பாதுகாவலர்களால் படுகொலை

ஹைத்தி அதிபர் பாதுகாவலர்களால் படுகொலை

ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ், அவரது இல்லத்தில் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள அந்நாட்டு இடைக்கால பிரதமர் ஜோசப், தாக்குதல் மனிதநேயமற்றது. வெறுப்பை தரக்கூடியது. நாட்டின் பாதுகாப்பு கட்டுக்குள் உள்ளது. போலீசார் மற்றும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது. முக்கிய இடங்களுக்கு, பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார். அதிபர் படுகொலையை தொடர்ந்து, தன்னை தானே அதிபராகவும் ஜோசப் அறிவித்துள்ளார். அதிபர் படுகொலையை தொடர்ந்து, தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வீடுகளுக்குள் உள்ளனர். ஒரு…

Read More

இந்திய மந்திரி சபையில் மோடியின் அதிரடி மாற்றம் – இளமையும் அனுபவமும் !!

இந்திய மந்திரி சபையில் மோடியின் அதிரடி மாற்றம் – இளமையும் அனுபவமும் !!

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்டவர்களில் பலர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், 36 பேர்…

Read More

உன்னால நான் கேட்டேன் !! என்னால நீ கேட்ட !! தமிழக பா.ஜவும் … அதிமுகவும் !!

உன்னால நான் கேட்டேன் !! என்னால நீ கேட்ட !!  தமிழக பா.ஜவும் … அதிமுகவும் !!

நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் உங்களால் தான் தோற்றோம் என கூட்டணியில் உள்ள அதிமுக, பா.ஜ., மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை.நாம் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம்’ என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.,வின் கே.டி.ராகவன், ‘அதிமுக.,வால் தான் பா.ஜ., தோல்வி அடைந்ததாக’ குறிப்பிட்டிருந்தார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர்…

Read More
1 85 86 87 88 89 256