காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியம்!! தலைமை அதிர்ச்சி

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இன்று கூண்டோடு பா.ஜ.,வில் ஐக்கியம்!! தலைமை அதிர்ச்சி

காங்கிரஸ் தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு பா.ஜ.வில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை தக்க வைப்பதில் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல், காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. இதனால், மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா நியமனம் செய்தார். இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு…

Read More

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்கள் வழக்கில் கைது

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்கள் வழக்கில் கைது

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச நிர்வாண படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் இதில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை : நாடாளுமன்றத்தில் மந்திரி விளக்கம் !!

இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை : நாடாளுமன்றத்தில் மந்திரி விளக்கம் !!

கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக ஒட்டுகேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த பார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து ஊடகங்கள் சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன. இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்ப்தற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது….

Read More

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க கனடா திட்டம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பயணக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை பல்வேறு நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், வரும் செப்டம்பர் முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலா பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள அமெரிக்கர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகளில் கனடாவில்தான் அதிக அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட தகுதியான வயது வந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு…

Read More

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் கொலை செய்யப்பட்டார்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் கொலை செய்யப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திக், கடந்த 2018ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர். டில்லி கலவரம், கோவிட் பொதுமுடக்கத்தின் போது புலம்பெயர்ந்தவர்கள், கோவிட் உயிர் பலி குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இவர், ராய்ட்டர்ஸ் என்னும் பத்திரிக்கை நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்க சென்ற குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம்…

Read More

எழுத்தர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனதாக போஸ்டர் – தமிழகத்தில் பரபரப்பு

எழுத்தர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் போனதாக போஸ்டர் – தமிழகத்தில் பரபரப்பு

நாகை மாவட்டம் பெருங்கடமனூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிவதற்காக எழுத்தர் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட கலெக்டரால் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு பணியை வழங்கலாம் என பெருங்கடம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி எழுத்தர் பதவி 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக அப்பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் வேலை வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியிருப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது…

Read More

தைவானில் 2 மணி நேரத்தில் 22 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தைவானில் 2 மணி நேரத்தில் 22 முறை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் நேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. காலை 6:52 மணிக்கு தொடங்கிய நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவான முதல் நிலநடுக்கம், இதர பகுதிகளில் 3 முதல் 5 ஆகப் பதிவானது. 2 மணி நேரத்தில் தொடர்ச்சியான 22 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இதேபோல், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்…

Read More

இங்கிலாந்தில் ஒரேநாளில் 42,302 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் ஒரேநாளில் 42,302 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 42,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,33,207 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 74 ஆயிரத்து 314 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 7,30,363 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு…

Read More

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சீன என்ஜினீயர் – சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சீன என்ஜினீயர் – சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலி

வடகிழக்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் கொகிஸ்தான் பகுதியில் தாசு நீர் மின் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து இன்று காலை ஒரு பஸ்சில் சீன என்ஜினீயர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 30 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சீன என்ஜினீயர் மற்றும் சீன வீரர்கள் உள்பட 10 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்துள்ளனர் அவர்கள் தாசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், சீன நாட்டினர்…

Read More

வரிகட்டு ஜோசப் விஜய் – நடிகர் விஜய்க்கு சென்னை ஹை கோர்ட் 1 லட்சம் அபராதம் !!

வரிகட்டு ஜோசப் விஜய் – நடிகர் விஜய்க்கு சென்னை ஹை கோர்ட் 1 லட்சம் அபராதம் !!

சொகுசு காருக்கு வரி விதிக்க தடைகேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆக, வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டாக் வைரல் ஆகி டிரெண்ட் ஆனது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். பாக்ஸ் ஆபிசிலும் நம்பர் 1 நடிகராக உள்ளார். அதோடு தற்போதைய நிலவரத்தில் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், அவரது…

Read More
1 84 85 86 87 88 256