யுக்ரேனில் அணை உடைந்த வெள்ளத்தில் மிதக்கும் கண்ணிவெடிகள் – என்ன காரணம்?
ரஷ்ய ஆக்கிரமிப்புக்குட்பட்ட, தெற்கு யுக்ரேன் பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய அணையான ‘கக்வோவ்கா அணை’ உடைக்கப்பட்டு வெளியேறிய பெருமளவு தண்ணீர், சுற்றியுள்ள நிலப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. அந்த வெள்ளத்தில் கண்ணிவெடிகள் மிதந்து வருவது புதிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அங்கு பேரழிவு ஏற்படலாம் எனச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
டினிப்ரோ ஆற்றின் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கெர்சன் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த அணை உடைப்புச் சம்பவம் தொடர்பாக ரஷ்யா – யுக்ரேன் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
