வரதட்சணை கொடுமை: பாஜக எம்.எல்.ஏ. மகன் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. யோகேஷ்வர் கர்க். இவரது மகன் பிரகாஷ். இதனிடையே, பாஜக எம்.எல்.ஏ. யோகேஷ்வர் மகன் பிரகாஷுக்கும் ராஷ்டிரிய லோக்தண்டிர்க் கட்சி எம்.எல்.ஏ. புகராஜ் கர்க் மகள் மம்தாவுக்கும் கடந்த கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, தனது கணவர் பிரகாஷ் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக மம்தா கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என பிரகாஷ் கோர்ட்டில் முன் ஜாமின் பெற்றார். இந்த வழக்கு கடந்த 11ம் தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது நடவடிக்கையில் இருந்து தடுக்க பிரகாஷுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை கோர்ட்டு ரத்து செய்தது. இந்நிலையில், வரதட்சணை கொடுமை வழக்கில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக எம்.எல்.ஏ. யோகேஷ்வர் கர்கின் மகன் பிரகாசை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.