விளம்பரத்துக்காகப் பெண்கள் ஓட்டுநர் பணிக்கு வரக்கூடாது – தமிழ்நாட்டின் முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர்
தமிழ்நாட்டின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான வசந்த குமாரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ரீத்தாபுரம் அருகே ஒற்றப்பனை விளை கிராமத்தில் தனது 400 சதுர அடி அளவிலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே உள்ள இலவுவிளை கிராமம். ஒரு வயது ஐந்து மாதமாக இருக்கும் போதே தாய் இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் வழி பாட்டி மற்றும் மாமா ஆகியோரின் வளர்பில் இலவுவிளை பகுதியில் வளர்ந்ததாக கூறுகிறார் வசந்த குமாரி.
இவர் கனரக வாகனங்கள் இயக்க கற்றுக்கொண்டது மற்றும் பணியில் சேர சந்தித்த இன்னல்கள் குறித்து பி.பி.சி தமிழிடம் பேசினார்.
