இலவச சேவைகள் மூலம் கோடிகளில் சம்பாதிப்பது எப்படி? இதில் பயனர்களுக்கு என்ன பாதிப்பு?

அமேசான் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதை நாம் அறிவோம். இந்த டிஜிட்டல் தளங்கள் நவீன முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன.

ஆனால், அவர்கள் எப்படி இவ்வளவு பணக்கார நிறுவனங்களாக மாறுகிறார்கள்? மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

டிம் ஓ’ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ் மற்றும் மரியானா மஸ்ஸுகாடோ ஆகிய மூன்று கல்வியாளர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயன்றனர்.

இன்றைய டிஜிட்டல் சந்தை யுகத்தில் இந்தத் தளங்களின் சக்தியை விளக்கும் ஒரு கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர்.

இந்த தளங்கள் இன்று மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இந்த நிறுவனங்கள் நம் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் விளம்பரதாரர்களிடம் இருந்து கட்டணத்தைப் பெற்று அதிக பணம் சம்பாதிக்கின்றன என இந்த மூன்று கல்வியாளர்களும் கூறினார்கள்.

கூகுள் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் உள்ள தேடுபொறிகள்(search engine) முதலில் பயனரின் ‘ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை’ அதாவது வணிக விளம்பரங்களைக் காட்டுகின்றன.

அவை ஆர்கானிக் முடிவுகள் எனப்படும் உண்மையான தேடல் முடிவுகள் அல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது அவர்களின் கோட்பாடு.
ஆர்கானிக் தேடல் முடிவுகள் பணம் செலுத்தப்படாத பட்டியல்களாகும். அவை தேடுபொறி முடிவுகள் பக்கங்களில் (SERPs) தோன்றும். இவை பயனர்கள் தேடும் சொல்லுடன் தொடர்புடையவை.