நரேந்திர மோதி ஆட்சியில் நாட்டின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதா – உண்மை என்ன?
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அந்தக் கட்சி கொண்டாடி வரும் வேளையில் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாஜக தொண்டர்கள், மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
