எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்த டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
தங்களுடைய கட்சியில் சேர்ந்தால் தலா ரூ. 20 கோடியும், மற்றவர்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி தருவதாகவும் ஆம் ஆத்மி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ., விலை பேசியதாகவும். இல்லா விட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை வாயிலாக நெருக்கடி தரப்படும் என மிரட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை (ஆக.25) காலை 11 மணிக்கு அனைத்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் வர வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
