கேதார்நாத், பத்ரிநாத் செல்கிறார் பிரதமர் மோடி
இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கேதார்நாத், பத்ரிநாத், அயோத்திய ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை வரும் 21,22-ம் ஆகிய தேதிகளில் உத்தர்கண்ட்டில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய தலைங்களான கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் சென்று வழிபாடு நடத்தவும், அங்கு நடைபெற்று பத்ரிநாத் மாஸ்டர் பிளான் எனப்படும் வளர்ச்சித்திட்டங்களை ஆய்வு செய்கிறார்.
பின்னர் அக். 23-ம் தேதியன்று உபி. மாநிலம் அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதையடுத்து உத்தர்கண்ட் முதல்வர் மோடி வருகைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
