எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன் ஹேக்கிங்கா? ஆப்பிள் எச்சரிக்கைக்கு மத்திய அரசு பதில்
ஐபோன்களை ஹேக் செய்ய, ‘மத்திய அரசு ஆதரவுடன்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் “அரசு ஆதரவுடன் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயன்றனர்,” என்று குற்றஞ்சாட்டினர். இதைத் தொடர்ந்து, ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.
செய்தி நிறுவனங்கள் மற்றும் பல இந்திய செய்தித்தாள்களின்படி, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இதுபோன்ற முயற்சிகளை அரசின் ஆதரவுடன் மேற்கொண்டதாக எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
அரசு உதவியுடன் தாக்குதல் நடத்துபவர்களுக்குப் போதுமான நிதியுதவி, அதிநவீன வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“அத்தகைய தாக்குதல் குறித்த கண்டறிதல்கள், ‘அச்சுறுத்தல் நுண்ணறிவு‘ சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் பெரும்பாலும் துல்லியமற்றவை அல்லது முழுமையற்றவை. தாக்குதல் பற்றிய சில எச்சரிக்கை செய்திகள் தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம் அல்லது தாக்குபவர்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை.”
ஹமாஸை இஸ்ரேலால் முற்றிலுமாக அழிக்க முடியுமா? பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்?
6 மணி நேரங்களுக்கு முன்னர்
“அத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை நாங்கள் எந்தச் சூழ்நிலையில் வெளியிடுகிறோம் என்பதை எங்களால் குறிப்பிட முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்வது, எதிர்காலத்தில் கண்டறிதலைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகளை ஏற்படுத்தித்தரும்.”
அதேநேரம், இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ள தகவல்கள் தெளிவில்லாமல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரத்தில் அரசு விரைவாக முடிவெடுக்கும் என்று தொடர் ட்வீட்களில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஹேக்கிங் முயற்சிகள் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு செய்தி வந்ததாக சமூக ஊடகங்களில் கூறியிருந்தனர்.
இந்த எம்.பி.க்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள செய்தியில், “அரசின் ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்களான நீங்கள் உங்கள் ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்ட ஐபோனை ரிமோட் மூலம் ஹேக் செய்ய முயற்சிக்கிறீர்கள் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்தத் தாக்குபவர்கள் உங்களை குறிவைக்கிறார்கள்,” என்று பதிவிட்டுள்ளனர்.
